காணும் பொங்கல் | சென்னையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் என்னென்ன?

சென்னை: சென்னையில் காணும் பொங்கலன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தெரிவித்துள்ள சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து மாற்றங்கள் குறித்த உடனடி தகவல்களை RoadEaseapp மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜனவரி 17 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக மெரினா கடற்கரையை ஒட்டி உள்ள காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது … Read more

கதவை இழுத்து சாத்தும் ஓபிஎஸ்; மத்திய அரசு அதிர்ச்சி!

அதிமுகவின் தலைமை பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடுமையான போட்டியும் மோதல் போக்கும் நிலவி வருகிறது. இவர்கள் 2 பேருமே தங்களது ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டு கட்சியை கைப்பற்ற பல்வேறு வழிகளில் திட்டங்களை தீட்டியபடி காய்களை நகர்த்திக்கொண்டு வருகின்றனர். இதில் எடப்பாடி பழனிச்சாமி ஒருப்படி மேலே போய் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என முடிசூட்டிக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியைவிட்டு நீக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் உச்ச … Read more

விறுவிறுப்பாக நடந்து முடிந்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – முதல் 3 இடங்களில் யார், யார்?

உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பரிசாக கார், இரண்டாம் பரிசாக பைக் மற்றும் மூன்றாம் பரிசாக பசுமாடு ஆகியவை வழங்கப்பட்டன.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பங்கேற்கும் மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற அவனியாபுரத்தில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காலையில் தொடங்கி 11 சுற்றுகளாக … Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு: 28 காளைகளைப் பிடித்தவருக்கு கார் பரிசு

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் இன்று(ஜன.15) நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் விஜய்க்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவையாகும். இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பொங்கல் தினமான இன்று நடைபெற்றது. அரசுத் தரப்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழுவும், அவனியாபுரத்தைச் சேர்ந்த 16 … Read more

கையில காசு.. வாயில தட்டு; திமுகவினருக்கு ஸ்டாலின் பரிசு!

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வண்ணக் கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொம்பு செடியை கட்டி மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பொங்கி … Read more

"உலகில் எங்கிருந்தாலும் வந்துருவோம்"-சமத்துவ பொங்கல் கொண்டாடும் புதுக்கோட்டை கிராம மக்கள்!

மெய்வழிச்சாலை கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக 69 ஜாதி, மதங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் பொங்கல் வைத்து பிரார்த்தனை செய்தனர். இன்றைய நவ நாகரீக நடைமுறை வாழ்வில் சமத்துவம் என்ற வார்த்தையின் தேவை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அதன் விளைவாகத்தான் கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாக்கள் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டது. இதன் நோக்கம் ஜாதி மதங்களை கடந்து அனைவரும் சமம் என்பதை … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால்

ஈரோடு இடைத்தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால் Source link

விமான விபத்தில் 72 பேர் உயிரிழப்பு!!

நேபாளத்தில் ஓடு பாதையில் மோதி விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 72 பேர் உயிரிழந்தனர். விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. காட்மாண்டுவில் இருந்து பொக்காரா சென்றதாக தெரிகிறது. அப்போது ஓடுபாதையில் மோதி எட்டி (Yeti) ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. 72 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 68 பயணிகள் பயணித்தனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 72 பயணிகளும் சம்பவ இடத்திலேயே உடல் … Read more

நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் சாகச சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

பொள்ளாச்சி: நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் சாகச சுற்றுலா மையங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் புகைப்படம் பொறிக்கப்பட்ட தமிழ்நாடு சுற்றுலாத்துறை பலூனில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று(15.01.2023) பயணம் செய்தார். முன்னதாக, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு சர்வதேச பலூன் … Read more

உழைத்த வேர்வையின் உப்பு இனிப்பாக மாறும் இந்நாள் – சீமான் பொங்கல் வாழ்த்து

தமிழ்நாடு மக்கள் இன்று தை பொங்கலை அவரவர் வீடுகளில் குடும்பமாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது; மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி தழைக்கும், பிழைக்கும் என்ற நம்பிக்கையில் பொங்கட்டும் தமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும் புரட்சிப் பொங்கல்! காலையில் எழுந்து கழனி நோக்கி நடந்து உழுது விதைத்து உழைத்து விளைத்து அறுத்து அடித்து குத்திப் புடைத்து புதுப்பானையில் போட்டு பொங்கலை … Read more