மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மருந்துக்கு கொடுக்கக் கூடாது! எச்சரிக்கை!

மருத்துவர் பரிந்துரையின்றி தூக்க மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க சென்னை மற்றும் … Read more

புத்தகங்களை மொழிபெயர்த்தால் 3 கோடி ரூபாய்… முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு…!!

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேருரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர் “இலக்கியச் செழுமை மிக்க நமது தமிழ்ப் புத்தகப் படைப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கவும், … Read more

உலகின் மிகவும் வயதான நபர் காலமானார்..!

உலகின் மிக வயதான நபராக இருந்த லூசில் ராண்டன் என்ற பிரெஞ்சு கன்னியாஸ்திரி ஆண்ட்ரே நேற்று காலமானார். அவருக்கு வயது 118. லூசில் ராண்டன் என்ற இயற்பெயர் கொண்ட கன்னியாஸ்திரி ஆண்ட்ரே, 1904-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி பிரான்ஸில் பிறந்தார். இவர், 1944ம் ஆண்டு, கத்தோலிக்க கிறிஸ்தவ அறக்கட்டளையில் சேர்ந்தபோது ஆண்ட்ரே என்ற பெயரைப் பெற்றார். இரண்டாம் உலகப் போரின்போது குழந்தைகளை பராமரித்து வந்த இவர், 28 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் முதியோர் மற்றும் ஆதரவற்றோரை … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர மத்திய அரசு முயற்சி: முத்தரசன்

சென்னை: “ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்லி இந்த நாட்டையே அதிபர் ஆட்சி முறைக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எல்லாம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். பொதுவுடைமைத் தலைவர் ஜீவானந்தத்தின் நினைவு தினத்தையொட்டி சென்னை காசிமேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் புதன்கிழமை (ஜன.18) மரியாதை செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களைச் … Read more

தூக்க மருந்து விற்பனை… ஃபார்மசிகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தினர். அதில் சென்னை, திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் வலிநிவாரணி மருந்துகள் பெருமளவில் வாங்கி, உரிய விற்பனை ரசீதுகள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. எனவே புலனாய்வு பிரிவு, மருந்துகள் ஆய்வாளரால் அந்த மருந்துக்கடைக்கு … Read more

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: கடும் போக்குவரத்து நெரிசல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் ரத வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் … Read more

உரிமம் ரத்து செய்யப்படும்.. மருந்து கடைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை..!

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும். கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று, மருந்து கடைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் சில நாட்களுக்கு முன்பு மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் நடத்த சோதனையில் வலி நிவாரணி மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்கப்பட்டதும், பெரும் அளவில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. … Read more

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்தொகுதி எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அத்தொகுதியுடன் நாடு முழுவதும் காலியாக உள்ள 6 சட்டப்பேரவை மற்றும் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 31ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் … Read more