இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

இன்று (டிசம்பர் 5ம் தேதி) திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று (டிசம்பர் 5ஆம் தேதி) அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட … Read more

போதையில் சேற்றில் புரண்டு போராட்டம் நடத்திய இளைஞர்!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கொல்லாபுரத்தில் இருந்து சங்கமங்கலம் செல்லும் சாலையில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அந்த சாலையின் குறுக்கே வாய்க்கால் செல்வதால் அதற்கான பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை விட்டு விட்டு பெய்ததால் அந்த இடம் சேரும் சகதியுமாக மாறியது. இதனால் விபத்து ஏற்படுவதகாவும் அப்பகுதி மக்கள் கூறினர். இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுபோதையில் சேரும், சகதியுமான அந்த சாலையில் படுத்து … Read more

இறை உணர்வோடு ஒன்றவைக்கும் சிறப்பு பெற்றது கர்னாடக இசை: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

சென்னை: மறைந்த வயலின் மேதை டி.என்.கிருஷ்ணன் நினைவு விருதுகளை இசைக் கலைஞர்களுக்கு வழங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நமது பாரம்பரிய கர்னாடக இசை பொழுதுபோக்குவதற்கானது அல்ல. இறை உணர்வோடு நம்மை ஒன்றவைப்பது. பக்திப்பூர்வமானது என்று தெரிவித்தார். பிரபல வயலின் கலைஞர் அமரர் டி.என்.கிருஷ்ணன் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் அவரது பெயரில் நினைவு விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், ‘சங்கீத கலாநிதி’டி.என்.கிருஷ்ணன் படத்தை … Read more

ஜி-20 ஆலோசனை கூட்டம்: டெல்லி செல்லும் ஸ்டாலின், இபிஎஸ்!

இந்தியா தலைமை ஏற்றுள்ள ஜி-20 மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கு பெறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் , எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய … Read more

இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர்

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் சென்னையில் ஜி-20 கூட்டம் நடைபெறும் என்று தெரிய … Read more

மேட்டுப்பாளையம்-கோவை இடையே தினசரி ரயில் சேவை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-கோவை இடையே பயணிகள் ரயில் இனி வாரத்தின் ஏழு நாட்களும் இயக்கப்பட உள்ளது. இந்த தினசரி ரயில் சேவையை நேற்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவை முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மெமு மின்சார பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ஐந்து முறையும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஐந்து முறையும் இயக்கப்பட்டு வந்தது. இதனை மேட்டுப்பாளையம், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து … Read more

ஆளுநர் என்றாலே எதையும் பார்க்காமல் கையெழுத்து போட்டுதான் ஆக வேண்டும் என்பது இல்லை – தமிழிசை சௌந்தர்ராஜன்.!

இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னரும், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததுவது:-  “இந்தியா ஜி-20 மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறது. இது நம் அனைவருக்கும் ஒரு பெருமைமிக்க நிகழ்வு. இந்த ஜி-20 அமைப்பிற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலத்தின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி வருகிற 9-ந் தேதி அனைத்து மாநில … Read more

இன்று ஜெயலலிதா 6-ம் ஆண்டு நினைவு தினம்: தனித்தனியே வந்து அஞ்சலி செலுத்தும் இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன், சசிகலா

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனியே அமைதி பேரணியாக வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது 6-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதிமுக தற்போது பழனிசாமி, பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் … Read more

பவானிசாகரில் யானை குன்னூரில் சிறுத்தை சாவு

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் கொத்தமங்கலம் சுஜில்குட்டை வனப்பகுதியில் நேற்று காலை வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் ஊழியர்கள் ரோந்து சென்றனர். ஓரிடத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்ததை கண்டனர். அந்த பெண் யானை எப்படி இறந்தது என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பெண் சிறுத்தை பலி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிச்சோலை பிரிவு, லேம்ஸ்ராக்  காவல்சுற்று … Read more