பிரதமர் வீட்டு வசதி திட்டம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் தகுதியில்லாதவர்களுக்கி வீடுகள் ஒதுக்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரே பயனாளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏழை மக்களுக்கான திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வுபெற்ற அரசு ஊழியகளுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியை சேர்ந்த சேக்ஸ்பியர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதவிர, … Read more

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் தொடங்கியது: பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் தொடங்கியது. குழந்தை வரம் கேட்பவர்களும், குழந்தை வரம் நிறைவேறிய பக்தர்களும் கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையை சுமந்து மாட வீதியை சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

'யானைக்கும் யானைக்கும் சண்டை' – கடைசியில் நடந்த சோகம்!

உரிகம் அருகே யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் காயமடைந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. ஓசூர் வனக்கோட்டம் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தில் உரிகம் வனச்சரகம் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் உன்சேபச்சிகொல்லை சரக பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து வன ஊழியர்கள் ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய தலைமையில் வனச்சரக அலுவலர் … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும்.  மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் … Read more

உள்ளாட்சி தேர்தல்..அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

டெல்லி மாநகராட்சி தேர்தலை ஒட்டி, அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இதில் 42 வார்டுகள் பட்டியலினத்தவர்களுக்கும், 50 சதவீத வார்டுகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் ஏற்பாடு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மெட்ரோ … Read more

சேகர் ரெட்டி, குட்கா மூலம் கிடைத்த ரூ.342.82 கோடிக்கு விஜயபாஸ்கர் முறையாக வரி செலுத்தவில்லை – வருமான வரித் துறை

சென்னை: சேகர் ரெட்டி பங்குதாரராக உள்ள எஸ்ஆர்எஸ் மைனிங், குட்கா உற்பத்தியாளர்கள் மற்றும் குவாரி மூலமாக கிடைத்த ரூ.342.82 கோடி வருமானத்துக்கு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முறையாக வரி செலுத்தவில்லை என உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ரூ.206.42 கோடிவருமான வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி, அவருக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலங்கள் மற்றும் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் முடக்கியுள்ளனர். இதை எதிர்த்து விஜயபாஸ்கர் … Read more

'என்ன வாழ்க்கைடா… லிப்டில் செல்லவே பயமாக உள்ளது' – ஆளுநர் தமிழிசை கிண்டல்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஜெயகோபால் கரடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் CBSE-யின்  தென் மண்டலம் அளவிலான மாபெரும் சதுரங்க போட்டிகள் கடந்த நவ. 30ஆம் தேதி முதல் நேற்று (நவ. 2) வரை  நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் உள்ளிட்ட மாநில 658 பள்ளிகளை சேர்ந்த இதில் 11, 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட 5,125 மாணவ மாணவியர்கள் இந்த மாபெரும் சதுரங்க போட்டி நிகழ்ச்சி கலந்து கொண்டு தங்கள் அதீத … Read more

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு விநாயகர் கோயில் தேரோட்டம் தொடங்கியது!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு விநாயகர் கோயில் தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகர் தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். விநாயகர் தேரோட்டத்தை தொடர்ந்து முருகன், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற உள்ளது. அம்மன் தேரை பெண்கள் மட்டும் இழுப்பார்கள், சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமிகள் இழுப்பார்கள்.