தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலம் அரிட்டாபட்டி: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை  அறிவித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது, சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது. அரிட்டாப்பட்டி கிராமம் என்பது 7 சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய … Read more

தேனி : கும்பக்கரை அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து, இந்த அருவிக்கு நீர்வரத்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மழை பெய்ததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  இந்த நிலையில், தேனி கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் நாளை … Read more

சிவன் கோவில்களில் கார்த்திகை மாத பிரதோஷ பூஜையில் சுவாமி தரிசனம் செய்ய கலந்து கொண்ட திரளான பக்தர்கள்..!

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை மாத பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்திற்கு உட்பட்ட கமலாலய திருக்குளத்தின் நடுவே அமைந்துள்ள ஸ்ரீ யோகாம்பாள் சமேத நாகநாதசுவாமி ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவார ப்ரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். … Read more

சிவகாசி அருகே ரயில் விபத்தை தடுத்த பணியாளர் – பாராட்டிய கோட்ட மேலாளர், அதிகாரிகள்

சிவகாசி: ஒவ்வொரு ரயில் நிலைய பகுதியிலும் ரயில் பாதைகள் சரியாக இருக்கிறதா என சோதனை செய்ய ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் தினந்தோறும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் நடந்து சென்று ஆய்வு செய்வர். இதன்படி, சிவகாசி பகுதி ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் கருப்பசாமி நவ., 20 பணியில் இருந்தபோது, காலை 6.45 மணிக்கு ரயில் பாதைகளை இணைத்து இருந்த பற்றவைப்பு (வெல்டிங்) விடுபட்டு தண்டவாளங்களில் இடைவெளி இருப்பதை கண்டுபிடித்தார். அந்த நேரத்தில் சிவகாசியில் இருந்து 6 … Read more

முன்னாள் துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெற்றதாக வழக்கு: ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்!

பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்திற்காக பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கணபதி, லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கணபதி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கின் விசாரணை நீதிபதி நிர்மல் … Read more

காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும்; எஸ்டிபிஐ செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமை வகித்தார். பொது செயலாளர் மணவை சாதிக் அலி வரவேற்றார். கூட்டத்தில் பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினம் டிசம்பர் 6ம்தேதி அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தேசம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 6  அன்று நாகர்கோவிலில் ஆர்ப்பட்டம் நடத்துவது. கட்சியின் மாவட்ட பொதுக்குழுவை நடத்துவது. கட்சியின் … Read more

சென்னை விமான நிலையத்தில் வேகமெடுக்கும் சரக்குகள் கையாளும் பணி; புதிதாக இணைந்த 2 ஏஜென்ஸிகள்

சென்னை விமான நிலையத்தில் வேகமெடுக்கும் சரக்குகள் கையாளும் பணி; புதிதாக இணைந்த 2 ஏஜென்ஸிகள் Source link

கேபிள் டிவி செயலிழப்பு விவகாரம் : தனியார் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

தமிழ்நாடு அரசின் கேபிள் டிவி நிறுவனத்தினுடைய சேவை மென்பொருள் தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தில் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, தனியார் மென்பொருள் நிறுவனத்தால் சட்டவிரோதமாக அரசு கேபிள் டிவி செயலிழப்பு செய்யபட்ட விவகாரத்தில் அந்த நிறுவனத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.  இதையடுத்து, அரசு கேபிள் டிவி சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும் … Read more

சிபிஐ அதிகாரி என போலி அடையாள அட்டை வைத்திருந்த நபர் கைது..!

திருப்பூரில் சிபிஐ அதிகாரி என போலி அடையாள அட்டை வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். பவானி நகரில் வசித்து வரும் கட்டிட மேஸ்திரியான ராசையா என்பவர்  மத்திய குற்ற புலனாய்வு துறை என்ற  அடையாள அட்டை வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில்  அங்கு சென்ற திருப்பூர் வடக்கு குற்ற பிரிவு போலீசார் ராசையாவை பிடித்து விசாரித்த போது,  போலியான அடையாள அட்டை வைத்திருந்ததும், மேலும் 2 நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு … Read more