சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை மழை விடுமுறை

சென்னை: மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (டிச.10) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: சென்னை விழுப்புரம் திருவள்ளூர் வேலூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ராணிப்பேட்டை கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். > வானிலை முன்னறிவிப்பு மாண்டஸ் புயல்: மாண்டஸ் தீவிர புயல் வெள்ளிக்கிழமை காலை … Read more

விரைவில் 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்லூரி இல்லாத ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்து உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா மற்றும் தமிழ் மன்றம் திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: கோவைக்கு … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி; சென்னை புறநகர் ரயில்கள் ரத்து?

மாண்டஸ் புயல் மாண்டஸ் புயல் மகாபலிபுரத்தி இன்றிரவு 8 மணி முதல் கரையைக் கடக்க தொடங்குகிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புயல் பாதிப்பு குறித்து தெரிவிக்க கட்டுப்பாட்டு உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளி – கல்லூரிகளுக்கு … Read more

மாண்டஸ் புயல் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி: மாண்டஸ் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் தேனி கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து சீராகும் வரை கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவிக்கு, கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். மாண்டஸ் புயல் … Read more

கடும் சீற்றத்தில் கடல்… `தயவுசெய்து இறங்காதீங்க’ ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கும் போலீஸ்!

தனுஷ்கோடியில் கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாமென போலீசார் தடை விதித்து ஒலி பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர் கடந்த ஒருவார காலமாக ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் மேகமூட்டத்துடன் கடல் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக காணப்பட்டு வந்த நிலையில், வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலின் தாக்கத்தால் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் சூறைக்காற்று வீசி வந்தது. இந்நிலையில் மன்னார் … Read more

அதற்கு மறுத்த இளம்பெண்.. பிணத்துடன் காரில் அலைந்து.. இளைஞர் செய்த பகீர் செயல்.! 

தஞ்சாவூரில் தனியார் பேருந்து ஓட்டுநர் நாகராஜ் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் தனக்கு திருமணமானதை மறைத்து ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், அவருக்கு திருமணமான விஷயம் இளம் பெண்ணுக்கு தெரிய வந்ததால் அவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். நாகராஜ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண்ணிடம் வற்புறுத்தியுள்ளார். இதற்கு இளம் பெண் அகல்யா ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த டிசம்பர் 6ஆம் தேதி நூலகத்திற்கு சென்ற அகல்யா மீண்டும் வீடு திரும்பாததால், அக்கம் பக்கம் தேடிய பெற்றோர் காவல் … Read more

தமிழகத்தில் நாளை மொத்தம் 8 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் இன்று இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (10.12.2022) 8 மாவட்டங்களில் பள்ளி, … Read more

கோவை காவல் ஆணையர், மாவட்ட எஸ்பி-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

சென்னை: அந்தந்தப் பகுதிகளில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஊர்வலங்களுக்கு அனுமதி அளிப்பதும், மறுப்பதும் காவல் துறையின் தனிப்பட்ட அதிகாரத்துக்குட்பட்டது எனக் கூறி, கோவை காவல் துறையினருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வால்பாறை திராவிட தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் எஸ்.கல்யாணி என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், “தொழிலாளர்களின் கூலி உயர்வை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம். … Read more

கடலுக்குள் சென்ற வீடுகள்; கெட்ட ஆட்டத்தை துவக்கிய மாண்டஸ்!

வங்க கடலில் நிலவி வரும் மாண்டஸ் புயல் புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் பகுதியில் இன்று நள்ளிரவு கரையை கடக்க வாய்ப்புகள் இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. அதே சமயம் தீவிர புயலாக இருந்த மாண்டஸ் இன்று காலை வலுவிழந்து தற்போது, சென்னையில் இருந்து தென் கிழக்கு பகுதியில் 260 கிமீ தொலைவில் நிலை … Read more