ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 4 பேர் ஆஜர்..!!

திருச்சி: அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 4 பேர் ஆஜராகினர். மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 4 பேர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்.

தென்காசி: அரசு கலைக் கல்லூரி மாணவர்களை தாக்கிய இளைஞர்கள் – காரணம் என்ன?

தென்காசி அருகே அரசு கலைக் கல்லூரி மாணவர்களுடன் மற்றொரு தரப்பினர் மோதிக் கொள்ளும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி அடுத்த சுரண்டை பேருந்து நிலையத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அரசு கலைக்கல்லூரி மாணவர்களுடன் மற்றொரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கிருந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இந்நிலையில், மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி மிகுந்த பரபரப்பை … Read more

டாக்டர், நர்சுகளை கண்காணிக்க பறக்கும்படை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் சரியான நேரத்தில் பணிக்கு வருகின்றனரா என்பதை கண்காணிக்க பறக்கும்படை அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் காலாவதியானதால், அந்த மருத்துவமனையின் மருந்து காப்பக பொறுப்பாளர் முத்துமாலை ராணி என்பவருக்கு பணி ஓய்வு பலன்கள் வழங்க அரசு மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை … Read more

'பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் தமிழகத்திற்கு இணை யாருமில்லை' – அமைச்சர் சேகர்பாபு

சென்னை: “பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் தமிழகத்திற்கு இணை யாருமில்லை. ஒன்றிய அரசு கூட ஒப்பிட்டாலும் தமிழகமே இதில் சிறந்து விளங்குகிறது” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னையில் இன்று காலை மருத்துவ முகாமை பார்வையிட்டு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “மாணவி பிரியா மரணத்தில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. … Read more

ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் அராஜகத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்: விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாச்சலம் புறவழிச்சாலையில் உள்ள உயர் மின் விளக்குகள் கடந்த சில தினங்களாகவே எரியாமல் இருந்த நிலையில் ஏன் விளக்குகள் எரியவில்லை என அதிமுகவினர் அதிகாரிகளை மிரட்டியும், திமுகவினரை அவதூறாக பேசியும், 108 ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் காரை ரோட்டில் நிறுத்தி சாலை மறியல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பொன்னேரி புறவழிச் சாலையில் அமைந்துள்ள, உயர் மின்விளக்குகள், கடந்த ஒரு வார காலமாக எரியாமல் இருக்க, நெடுஞ்சாலை துறை … Read more

சாலை ஓராண்டுக்குள் சேதம்; அதிமுக ஆட்சியில் ரூ.1.29 கோடி ‘ஸ்வாகா’: லஞ்ச ஒழிப்புத்துறையில் மார்க்சிஸ்ட் கட்சி புகார்

மானாமதுரை: அதிமுக ஆட்சியில் ரூ.1.29 கோடியில் அமைத்த சாலை ஓராண்டுக்குள் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறியுள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிளகனூர் ஊராட்சியில் இருந்து, கொம்புக்காரனேந்தல் வரை சாலை அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 29 லட்சத்து 56 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. இதன்படி … Read more

தருமபுரி: கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஒட்டிகள் அவதியடைந்தனர். கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் தொடர் மழை இருந்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக மழை பொழியவில்லை. இதைத் தொடர்ந்து மழை நின்றதால், பனிப்பொழிய தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, அரூர் … Read more