மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல் அரிப்பு – டேனிஷ் கோட்டைக்கு ஆபத்து!

தரங்கம்பாடியில் கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் கோட்டையை பாதுகாக்க கருங்கற்களால் ஆன அலைதடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கி.பி.1620 ஆம் ஆண்டு டேனிஷ் நேவி கேப்டன் ரோலண்ட் கிராப் என்பவரால் தரங்கம்பாடி கடற்கரையில் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுபாட்டுக்கு இது மாறியது. இந்நிலையில் கடந்த 2002-ல் … Read more

#BREAKING : மாண்டஸ் புயல் எதிரொலி.. நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம்.!

மாண்டஸ் புயல் காரணமாக நாளை தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் தீவிரப் புயலாக உருவான ‘மாண்டஸ்’ தற்போது புயலாக வலுவிழந்து, சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 110 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல், மாமல்லபுரத்தில் இன்று இரவு 11:30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று … Read more

சென்னை மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கும் மழை!!

மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புயலானது சென்னை அருகே 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது. இதனால் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும். மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காற்றுடன் … Read more

மாண்டஸ் புயல் | மின் விநியோகம் பாதிக்காமலிருக்க தயார் நிலையில் கூடுதல் பணியாளர்கள்: செந்தில்பாலாஜி

கோவை: தமிழத்தில் மழை பெய்யும் பகுதிகளில் கூடுதல் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர், மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியது: ”தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில், மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக முதல்வர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பல்வேறு ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் வழங்கினார். ஜூன் முதல் அக்டோபர் வரை ஏறத்தாழ 44 ஆயிரம் பழுதடைந்த … Read more

திருவள்ளுவர் சிலை வைக்க 4 வாரங்களில் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

திருவள்ளுவர் சிலை வைக்க 4 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. திண்டுக்கல் மேட்டுப்பட்டி அய்யன் திருவள்ளுவர் இலக்கியப் பேரவை செயலாளர் கணேசன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது: தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, பொது மக்களிடையே தமிழ் இலக்கிய ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த சங்கம் கடந்த … Read more

மாண்டஸ் புயல் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவண்ணாமலை: மாண்டஸ் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை: சிசிடிவி வயர்களை துண்டித்து ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

திருச்சிற்றம்பலத்தில் பழங்கால அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில் ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டு போனது தொடர்பாக மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் கோயில் உள்ளது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. இந்நிலையில், இக்கோயிலுக்குச் சொந்தமான ஐம்பொன் சிலைகளை நேற்று இரவு மர்ம நபர்கள் நடராஜர் சன்னதியில் இருந்த 4 அடி உயரம் … Read more

#BREAKING : தீவிரமடையும் மாண்டஸ் புயல்.. டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு.!

மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பட்டுள்ளது. வங்கக்கடலில் தீவிரப் புயலாக உருவான ‘மாண்டஸ்’ தற்போது புயலாக வலுவிழந்து, சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல், மாமல்லபுரத்தில் இன்று இரவு 11:30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read more

சென்னை மெட்ரோ ரயில்கள் இயங்குமா? – நிர்வாகம் விளக்கம்!!

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே, மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், புயல் அடித்தாலும் கூட சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போதிலும், சென்னை விமான நிலையம் முதல் … Read more