ஆன்லைனில் வெடிமருந்து – விசாரணைக்கு பிறகு இளைஞர் கைது!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஆன்லைனில் வெடி மருந்து வாங்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் கோவை குரும்பபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடந்த மே மாதம் 13ஆம் தேதி பிளிப்கார்ட் மூலம் பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் ஆகியவற்றை வாங்கியது தெரியவந்தது. அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்திய போது, அவர் பொருட்களை வாங்கவில்லை என்றும், தனது பழக்கடையில் வேலை செய்யும் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் வாங்கியதாக … Read more

ஆளுநருடன் பழனிசாமி சந்திப்பு – சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக புகார்

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சி மீதான, 10 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை ஆளுநரிடம் அவர் அளித்தார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: … Read more

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை: எல்லை தாண்டி வந்ததாக ஜிபிஎஸ் வரைபடம் வெளியீடு

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்துள்ளனர். வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் கடந்த 5 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. நேற்று நிலைமை சீரான நிலையில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழிலுக்கு கிளம்பினர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு … Read more

சடலத்தை புதைப்பதிலும் சாதியா? பொதுவான மயானத்தை உருவாக்குங்கள்!-உயர் நீதிமன்றம் ஆதங்கம்

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும், சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை என ஆதங்கம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மயானங்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நவகுறிச்சி கிராமத்தில் வண்டிப் பாதையில் அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுக்கும்படி அருகில் உள்ள நில உரிமையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தொடரப்பட்ட அந்த மனுவில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர்கள் என அனைத்து … Read more

மைதானத்திற்குள் பேரணி நடத்துவதா? – உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் மேல்முறையீடு

மைதானத்திற்குள் பேரணி நடத்துவதா? – உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் மேல்முறையீடு Source link

நான்கு மண்டலங்களில் அறுவை சிகிச்சை தணிக்கை குழு அமைக்க சுகாதாரத்துறை முடிவு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறுவை சிகிச்சை நடைமுறைகள் குறித்தான கையேட்டை வெளியிட்டார்.  அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் “அறுவை சிகிச்சை குறித்தான ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சைக்கான நெறிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் பொழுது கையாள வேண்டிய விதிமுறைகள் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்கள் அடங்கிய … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 13 மாவட்டங்களில் மழை..!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், … Read more

தமிழகம் முழுவதும் சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி நிதி – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக். 19-ம் தேதி விதி 110-ன் கீழ், நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடைத் திட்டங்கள் மற்றும் குடிநீர்க் குழாய் பணிகள் போன்றவற்றால் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் 2016-17-ம் ஆண்டுக்குப் பின்னர் மேம்படுத்தப்படாமல், பழுதடைந்த நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான … Read more

நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவைச் சிகிச்சை -மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தையின் நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் தவறுதலாக அறுவைசிகிச்சை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சம்மந்தப்பட்ட மருத்துவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். குறைபாடுடன் பிறந்த குழந்தை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(25)- கார்த்திகா(23) தம்பதியினர் 2018ஆம் ஆண்டு திருமணமாகிய நிலையில் அதே பகுதியில் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் அஜித்தின் மனைவி கார்த்திகாவிற்கு கடந்த (2021)ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் … Read more