ரயில் தண்டவாளத்தில் விரிசல் – முன்கூட்டியே எச்சரித்த பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்

கடலூரில் ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை முன்கூட்டியே பார்த்த பெண் ஒருவர் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று ரயிலை நிறுத்தி பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளார். அப்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்கடவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சு. இவர் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது அதில் விரிசல் இருந்ததை பார்த்துள்ளார். உடனடியாக இது சம்பந்தமாக ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று சேந்தனூர் ரயில் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில் … Read more

இந்தியாவில் இனி கடல் அலை மூலம் மின் உற்பத்தி செய்யலாம்..!! புதிய கருவியை உருவாக்கிய சென்னை ஐ.ஐ.டி ..!!

இந்தியாவின் எரிசக்தி பற்றாக்குறை சமாளிக்கும் வகையில் பசுமை எரிசக்தியை உருவாக்கும் வகையில் பல்வேறு முறைகளில் மின் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடல் அலையின் சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையை சென்னை ஐ.ஐ.டி கண்டுபிடித்துள்ளது.  கடல் அலையின் வேகத்தில் டர்பைன் சுழற்றி மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்ப கருவியை சென்னை ஐ.ஐ.டி தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் 20 மீட்டர் ஆழத்தில் கருவியை நிலை நிறுத்தி ஆய்வு செய்துள்ளது. … Read more

இமாச்சல பிரதேசத்தில் இழுபறி – கருத்துக்கணிப்பு முடிவு!!

இமாச்சல பிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவுகளில் இழுபறி இருக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் முடிவில் தெரியவந்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 75.6 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில், ஆட்சியமைக்க 35 இடங்ளில் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியே மீண்டும் ஆட்சியைக் … Read more

வேகமெடுக்கும் பரந்தூர் விமான நிலைய பணிகள் – தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயாரிக்க தீவிரம்

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு விரைவுபடுத்தியுள்ளது. அதன்படி, தொழில்நுட்ப பொருளாதார ரீதியிலான விரிவான அறிக்கை தயாரிக்க ஆலோசகரை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) வெளியிட்டுள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் பயணிகள் எண்ணிக்கை, சரக்குகள்கையாளும் திறன் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டும், பொருளாதார திறன் மேம்பாட்டைக் கருதியும் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமான இடங்களில் … Read more

கார்த்திகை தீப திருவிழா – திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீப திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோயிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையை பக்தர்கள் அண்ணாமலை என்று பெயர் சூட்டி சிவனாக வணங்கி வருகின்றனர். பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள்.  இந்தச் சூழலில் திருவண்ணாமலை … Read more

 சின்னசேலம் அருகே கலவரத்தால் மூடப்பட்ட தனியார் பள்ளியில் நேரடி வகுப்புகள் துவங்கியது: 4 மாதத்துக்கு பின் மாணவர்கள் வருகை

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி கடந்த ஜூலை 13ம் தேதி திடீரென மாடியில் இருந்து விழுந்து இறந்ததை தொடர்ந்து பள்ளியில் நடந்த வன்முறையில் கட்டிடங்கள், பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் பள்ளி மூடப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே மாணவர்கள் நலன்கருதி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பள்ளி கட்டிடங்கள் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை … Read more

கார்த்திகை தீபத் திருவிழா : இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

இன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. தமிழத்தில் சிறப்பு வாய்ந்த கோவிலாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பௌர்ணமி கிரிவலம் என பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரபலமானதாகும். கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு … Read more

தொடர்ந்து அரங்கேறும் அதிர்ச்சி சம்பவங்கள்… டெல்லியை தொடர்ந்து ஆந்திரா…!!

டெல்லியில் காதலியை காதலனே 22 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கியது… அந்த சம்பவம் நாம் மறப்பதற்குள் அதே போல் ஒரு சம்பவம் ஆந்திராவிலும் அரங்கேறியுள்ளது. விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள நபர் ஒருவர் தனக்கு சொந்தமான ஒரு வீட்டை, தம்பதி ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.ஆனால் அந்த வீட்டில் குடியிருந்தவரோ கடந்த 1 ஆண்டு காலமாக வாடகை கொடுக்கவில்லை. இதனால் அதிரமடைந்த வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அவர்களது பொருட்களை வெளியே வீச … Read more

கல்லூரி நிகழ்ச்சிகளில் கல்வி பற்றி பேசாமல் அரசியல் பேசுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி – அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

சென்னை: கல்லூரி நிகழ்ச்சிகளில் கல்வி பற்றி பேசாமல், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் பற்றிதான் அதிகம் பேசுவதாக அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் குறித்த ஆய்வுக் கூட்டம் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துறை செயலர் கார்த்திகேயன், அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ், கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். கல்லூரிகளின் செயல்பாடுகள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து … Read more