நாகை அருகே கோயில் கட்டுமான பணியின்போது கீழே தவறி விழுந்த ஸ்தபதி உயிரிழப்பு..!!

நாகை: நாகை மாவட்டம் சிவசத்தி நகரில் கோயில் கட்டுமான பணியின்போது ஸ்தபதி ராஜா என்பவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். சிதம்பரத்தை சேர்ந்த ஸ்தபதி ராஜா உயிரிழந்தது தொடர்பாக வெள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாநில நிதியமைச்சர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்! -பிடிஆர் கலந்து கொள்வாரா?

2023ம் வருட பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. கோவிட் பாதிப்பிலிருந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், ரஷ்யா- உக்ரைன் போரால் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை உலகம் முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது. எகிறும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பலமுறை தொடர்ச்சியாக வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது. இத்தகைய சூழலில், பொருளாதாரம் வளர்ச்சியை அதிகரிக்கவும் அத்துடன் விரைவாக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் துரித நடவடிக்கைகள் … Read more

அரியலூரில் அரளி விதையை அரைத்து குடித்து பெண் தற்கொலை.! 3 பேர் கைது.!

அரியலூர் மாவட்டத்தில் பெண் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூர் மாவட்டம் நமங்குணம் காலனி பகுதியை சேர்ந்தவர் கரும்பாயிரம்(49). இவர் அப்பகுதியில் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (40). இந்நிலையில் சம்பவத்தன்று இவர்கள் வீட்டின் அருகே வசிக்கும் பாப்பாத்தி (36) என்பவர் கருப்பாயிரத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதைப் பார்த்த தமிழ்ச்செல்வி, பாப்பாத்தியிடம் ஏன் என் கணவருடன் பழகிராய் என்று கேட்டு தாக்கியுள்ளார். … Read more

அனைத்து அரசு பணியிலும் 45% இடஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையானது 1000 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு பணியிடங்களிலும் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி உள்ளிட்ட 12 துறைகளின் முதன்மைச் செயலர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், “தமிழகத்தின் வளர்ச்சி என்பது ஓர் துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்க கூடாது. … Read more

தமிழகத்தில் 14.6 லட்சம் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தகவல்

சென்னை: தமிழகத்தில் 14.6 லட்சம் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெறுவது தொடர்பாக அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுக்கான பயிற்சி முகாமை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சென்னையில் இன்று (நவ.24) தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தியாளர்களிடம் பொருள்கள் பெற்று அதற்கு … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கே.எஸ்.அழகிரி விடுத்த எச்சரிக்கை! இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்!

நேருவைப் பற்றியோ, லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றியோ ஆதாரமற்ற அவதூறுகளைக் கூறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு எதிராக வரம்புகளை மீறி தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் எந்த முடிவையும் ஆளுநர் எடுக்க முடியாது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக … Read more

கர்ப்பிணி மனைவி மரணம்… அகோரியாக மாறிய கணவர் – நிர்வாண பூஜையால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன பசிலிகுட்டை பகுதியைச் சேர்ந்த ராஜாதேசிங்கு என்பவருக்கு நான்கு வருடங்கள் முன்பு பூர்ணிமா (25) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. பூர்ணிமா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று  வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் வாட்டர் சர்வீஸ் செய்யும் கருவியில், மாட்டு கொட்டகையை சுத்தம் செய்யும்போது எதிர்பாராத விதமாக கருவியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனை தொடர்ந்து உடலை, … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தது தொடர்பாக கடந்த 23.6.2015ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கோகுல்ராஜின் தாய் சித்ரா மனுவையடுத்து வழக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் இருந்து … Read more

நிவேதிதா லூயிஸ் To சிற்பி.பாலசுப்பிரமணியம்: தமிழ்ப் பேராய விருது 2022 பெற்றவர்களின் விபரம்

2022-ம் ஆண்டுக்கான தமிழ் பேராய விருதுகளை எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனரும், தமிழ் பேராய புரவலருமான டாக்டர் பாரிவேந்தர் மற்றும் தமிழருவி மணியன் ஆகியோர் வழங்கினர். சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கில் தமிழ் பேராய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ் பேராய விருதுகளை டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. மற்றும் காந்திய நெறியாளர் தமிழருவி மணியன் ஆகியோர் இணைந்து வெற்றிபெற்ற விருத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கினர். சுதேசமித்ரன் தமிழ் இதழ் விருது, … Read more