ஜன.9-ல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்: தீவிர வாக்கு சேகரிப்பில் வழக்கறிஞர்கள்

செனனை: வரும் ஜனவரி 9-ல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடவுள்ள வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கங்களில் ஒன்றாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தச் சங்கத்தில் சுமார் 17,000 வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் . இந்தச் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கடந்த 2016-ம் … Read more

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த ஆண்டு தொகுதி 2 மற்றும் 2 A பதவிகளுக்கான 5,529 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் பேர் பங்கேற்றனர். இந்த முதல் நிலைத் தேர்வு எழுதிய பத்து இலட்சம் பேரில், ஒரு பதவிக்கு பத்து … Read more

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு திருவாரூர் மாவட்ட பாஜ நிர்வாகி கைது

மன்னார்குடி: முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திருவாரூர் மாவட்ட பாஜ நிர்வாகி நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். பால் விலை உயர்வை கண்டித்து பாஜ சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டையில் ஒன்றிய கவுன்சிலர் செல்வம்  தலைமையில் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜ பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் செந்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இது … Read more

உலக அளவில் பொருளாதாரம் தடுமாற என்ன காரணம்? – நிதியமைச்சர் பிடிஆர் EXCLUSIVE INTERVIEW

உலக அளவில் பல்வேறு நாடுகள் பணவீக்கத்தாலும், விலைவாசி உயர்வாலும் பாதிக்கப்பட்டு வருவதை கண்கூடாக காண முடிகிறது. இதற்கான காரணங்கள் குறித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , புதியதலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். பேட்டி காண –  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

#சென்னை | காதலியின் "பாய் பெஸ்டி"யை உயிரோடு கொளுத்திய காதலன்!

சென்னை வியாசர்பாடி அருகே காதலியின் “பாய் பெஸ்டி”யை உயிரோடு கொளுத்திய காதலனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வியாசர்பாடியை ராஜேஷ் என்பவர், புளியந்தோப்பு பகுதியில் ஆடு தொட்டியில் ஆடுகளை பராமரிக்கும் பணியை செய்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று ராஜேஷ் தன் பணியை முடித்து விட்டு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மினி வேன் ஒன்றில் தூங்கியதாக சொல்லப்படுகிறது. அந்நேரம் அங்கு வந்த ஒரு மர்ம நபர், ராஜேஷ் மீது தீயை பற்ற வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான 13 பேரின் குடும்பத்துக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதி – முதலமைச்சர் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தலா இருபது லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது கடந்த அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பதிலளித்த முதலமைச்சர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். Source link

சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அண்ணாமலை ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீர்காழியில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் மிகக் கனமழை பெய்தது. சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்ததால், சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏராளமான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் 14-ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு … Read more

பவானிசாகர் அணை: ஈரோடு மக்களுக்கு இப்படியொரு மகிழ்ச்சி தகவல்!

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இதன் மொத்த கொள்ளளவு 105 அடி. இந்த அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஈரோட்டில் இருந்து 76 கிலோமீட்டர் தொலைவில் பவானிசாகர் அணை அமைந்துள்ளது. தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய அணை என்ற பெருமைக்கு உரியது. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி … Read more

களக்காட்டில் 30 ஆண்டுகளாக தொடரும் அவலம்; பராமரிப்பின்றி பாழான துணை சுகாதார நிலையம்: விரைவில் சீரமைக்கப்படுமா?

களக்காடு: களக்காட்டில் 30 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பாழடைந்துள்ள துணை சுகாதார நிலையம் விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள்  உள்ளனர். களக்காடு  கோவில்பத்து பகுதியில் இயங்கி வரும் துணை சுகாதார நிலையத்தில் கோவில்பத்து  மற்றும் களக்காடு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கர்ப்பிணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். வாரத்தில் திங்கள், புதன்கிழமை என இரு நாட்கள் செவிலியர் சிகிச்சை அளித்து வருகிறார். மற்ற நாட்களில்  துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. திருக்குறுங்குடி ஆரம்ப  … Read more