திருச்சியில் இன்று (25.11.2022) பெண்களுக்கான மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவம்பர் 25ம் தேதி) மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் … Read more

ரூபி மனோகரன் மீதான சஸ்பெண்ட் நிறுத்திவைப்பு!!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற மோதல் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் கலந்து கொள்ள 15 நாள் அவகாசம் கேட்டு ரூபி மனோகரன் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் மற்றொரு தரப்பான ரஞ்சன் குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மேற்கொள்ளும் வரை, ரூபி மனோகரன் தற்காலிகமாக … Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 23-ம் தேதி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து 24-ம் தேதி (நேற்று) காலை வலுவிழந்தது. தற்போது … Read more

பாஜகவை வீழ்த்த களமிறங்கும் வைகோ: மக்களவைத் தேர்தலுக்கு ரெடி!

2024 பாராளுமன்ற தேர்தலுக்காக மதவாத சக்தி பாஜகவிற்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொள்வார் என நெல்லையில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறினார். நெல்லையில் மதிமுக நிர்வாகி செல்வகோபால் என்ற ஸ்ரீதர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்த நிலையில் அவரது இல்லத்திற்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.அதனை தொடர்ந்து மதிமுக நிர்வாகி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் … Read more

குக்கர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள அமைப்பு!!

கர்நாடகா மாநிலம் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புக்கு ஒரு இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை கார் வெடிப்பை தொடர்ந்து மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ஆம் தேதி சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென வெடித்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஆட்டோவில் பயணித்த நபர் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் வெடித்தது … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு, சுய வேலைவாய்ப்பு பயிற்சியுடன் தொழிற்திறன் பயிற்சி- முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத் துறைகள் மூலம் தொழிற்திறன் பயிற்சியும் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில்பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்டபகுதியினரின் வளர்ச்சியாகவும் இருக்கக் கூடாது. அனைவருக்குமான வளர்ச்சியாக … Read more

சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் மழையால் பாதித்த மக்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்: எம்எல்ஏ, கலெக்டர் தொடங்கி வைத்தனர்

செம்பனார்கோயில்: சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கும் பணியை எம்எல்ஏ நிவேதா முருகன், கலெக்டர் லலிதா ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை பெய்தது. இதனால் சம்பாநடவு செய்த வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் … Read more

அரசியல்வாதிகளின் சிம்மசொப்பனம்.. தேர்தல்களில் கறார்.. யார் இந்த டி.என் சேஷன்?

அரசியல்வாதிகளின் சிம்மசொப்பனம்.. தேர்தல்களில் கறார்.. யார் இந்த டி.என் சேஷன்? Source link