தமிழகத்தில் இன்று (18.11.2022) எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.. முழு விபரம்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (நவம்பர் 18ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோவை  டாடாபாத் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. சிவகங்கை சிங்கம்புணரி மற்றும் அ. காளாப்பூர் துணை … Read more

6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைதண்டனை அனுபவித்துவந்த 7 பேரில் பேரறிவாளனைக் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. அதைத்தொடர்ந்து நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யுமாறு மனு தாக்கல் செய்தனர். அதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, நளினி உட்பட மற்ற … Read more

சாலையில் சென்ற இளைஞரை வழிமறித்து மொபைல் போனை பறித்து-எட்டி உதைத்து தாக்கிய திருநங்கைகள் கைது

தூத்துக்குடியில், சாலையில் நடந்து சென்ற இளைஞரை வழிமறித்து மொபைல் போனை பறித்து-எட்டி உதைத்து தாக்கிய பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகளை, சிசிவிடி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் முன்பாக நின்றுகொண்டு வெளியே வரும் பொது மக்களை வலுக்கட்டாயமாக இழுத்து செல்போன் மற்றும் பணம் பறிக்கும் செயலில் திருநங்கைகள் தொடர்ந்து ஈடுபவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், குற்ற செயலில் ஈடுபட்ட 10 திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு … Read more

காசி தமிழ்ச் சங்கமம் விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து முதல் குழு பயணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து வழியனுப்பினார்

சென்னை: காசி தமிழ்ச் சங்கமம் விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து நேற்று ரயிலில் புறப்பட்ட 216 பேர் கொண்ட முதல் குழுவை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். மத்திய அரசு சார்பில் ‘ஒரே பாரதம் – உன்னத பாரதம்’ இயக்கத்தின்கீழ், தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள வரலாற்று தொடர்பை எடுத்துரைக்கும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி நவ.17 முதல் டிச.16-ம் தேதி வரை ஒரு மாதம் … Read more

ஐடிஐ பயிற்றுநர்களை அவுட் சோர்சிங் முறையில் நியமிக்க இடைக்கால தடை

மதுரை: ஐடிஐ பயிற்றுநர்களை அவுட் சோர்சிங் முறையில் நியமிக்க ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தேனியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அரசு ஐடிஐக்களில் கணினி மற்றும் மென்திறன் பயிற்றுநர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். பலரது ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்படவில்லை. ஐடிஐ பயிற்றுநர் பணியிடத்தை தனியார் ஏஜென்சி மூலம் அவுட் சோர்சிங் முறையில் நியமிப்பது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை செயலர் தரப்பில் … Read more

யுவன், சச்சின் குறித்து அவதூறு பதிவு… லவ் டுடே இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு

யுவன், சச்சின் குறித்து அவதூறு பதிவு… லவ் டுடே இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு Source link

மழை வெள்ளம்.. இன்று குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

தமிழகத்தில் வடகிழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக  கன மழை பெய்தது. அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெயத கனமழையால்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக ஒருசில பகுதிகளில் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து பயிர்கள் நாசமாகியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த … Read more

இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் .. தமிழ்நாடு அரசு உத்தரவு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 18 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 20-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. … Read more