அரியலூர், செந்துறையில் நாளை மின் தடை.. எந்த பகுதியெல்லாம் தெரியுமா..?

அரியலூர், தேளுர் மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களில் நாளை (நவ.19-ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ள காரணமாக, காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படுவதாக ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். அதன்படி, அரியலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கயர்லாபாத், ராஜீவ் நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜ நகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சி நத்தம், சிறுவூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி … Read more

பதவி நீக்கம் செய்யப்பட்ட மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரன்.

திருச்சி: மல்லியம்பத்து ஊராட்சியில் நிதி முறைகேடுகள் நிரூபணம் ஆன நிலையில் மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். திருச்சி மாநகர் அருகிலுள்ள ஊராட்சிகளில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன வரிவசூல், பிளான் அப்ரூவலுக்கு ஆன்லைன் ரசீது இல்லாததால் தலைவர்கள், கிளார்க்குகள் தனித்தனி ரசீது புத்தகம் வைத்துக் கொண்டு வரி வசூல் செய்தும், பிளான் அப்ரூவலும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரன் வீட்டு வரி, … Read more

தொழில் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதும் திராவிட மாடல் தான்: ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (18.11.2022) சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “1920-ஆம் ஆண்டு தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு எனப்படும் தொழிலதிபர்கள் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. 1920 என்பது மிகமிக முக்கியமான ஆண்டு! திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியானது முதன்முதலாக ஆட்சி அமைத்த ஆண்டு 1920-ஆம் ஆண்டு. அப்போதுதான் பல்வேறு தொழில் அமைப்புகள் இங்கு உருவானது. இத்தகைய … Read more

நவம்பர் 20,21-ல் கனமழை பெய்யக்கூடும் என்ற தகவலையடுத்து தஞ்சசையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பேட்டி

கும்பகோணம்: நவம்பர் 20,21-ல் கனமழை பெய்யக்கூடும் என்ற தகவலையடுத்து தஞ்சசையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கும்பகோணத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டியளித்துள்ளார்.

வீச்சருவாளுடன் டாஸ்மாக் ஊழியர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பல்! கரூரில் பரபரப்பு

கரூர் அருகே டாஸ்மாக் பாரில் ஒருவர் வீச்சருவாளுடன் அங்கிருந்த ஊழியர்களிடம் பணம் கேட்டு மிரட்டி, பணம் தராத டாஸ்மாக் ஊழியர்களை வீச்சருவாளின் பின்பக்கத்தால் தாக்கி தப்பியோடிய வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரை அடுத்த ஆத்தூரில் டாஸ்மாக் மதுபான கடையும், அதை ஒட்டிய பாரும் செயல்பட்டு வருகிறது. நேற்று அந்த பாருக்கு சென்ற இளைஞர்கள் 3 பேர், பாரில் வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தர மறுக்கவே நீண்ட வாளை … Read more

ராஜீவ் கொலையாளிகளை விட்டது போல் என்னையும் விடுங்க: சுப்ரீம் கோர்ட்டில் மனு..!

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்தது போல், 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என்னையும் விடுதலை செய்யுங்கள் எனக் கோரி, கர்நாடகாவைச் சேர்ந்த 80 வயது நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஷரத்தானந்தா என்ற முரளி மனோகர் மிஸ்ரா. இவர், மைசூரு முன்னாள் திவான் சர் மிர்ஸா இஸ்மாயில் பேத்தி ஷகரேக் நமாஸியை கடந்த 1986-ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்நிலையில், கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் … Read more

தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: “இந்த 15 மாத காலத்தில் தமிழகத்தில் ஏராளமான புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் நிறுவனங்களைத் தொடங்குகின்றனர். அந்த வகையில், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் தென்னிந்திய வேலை அளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா இன்று (நவ.18) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “1920 என்பது மிகமிக முக்கியமான ஆண்டு. திராவிட இயக்கத்தின் … Read more

பிரியா மரணம்: முன் ஜாமீன் கோரும் மருத்துவர்கள்!

தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்த வழக்கில், இரு மருத்துவர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். கால் முட்டியில் ஏற்பட்ட ஜவ்வு கிழிவு காரணமாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா, பெரியார்நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது கால் அகற்றப்பட்டது. தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். பெரியார்நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட … Read more

கலைமாமணி விருது எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? எவ்வாறு நபர்களை தேர்வு செய்கிறீர்கள்? அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: கலைமாமணி விருது எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? எவ்வாறு நபர்களை தேர்வு செய்கிறீர்கள் என அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சாதனைகள் படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய விருது தற்போது 2 படத்தில் நடித்தாலே வழங்கப்படுகிறது. கலை பற்றி தெரியாதவர்களுக்கு கூட கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. இயல், இசை, நாடக மன்றம் முறையாக செயல்படுவதில்லை எனவும் விமர்சனம் செய்தது.