விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்: ஒப்புதல் வழங்கியது அமைச்சரவை..!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. முன்னதாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தின. இந்த நிலையில் தற்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை எதிர்கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. பழைய … Read more

ஏடிஎம்-மில் பணம் எடுக்க உதவுவது போல் பெண்ணை ஏமாற்றிய இளைஞர்- ரூ.56,000 மோசடி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஏடிஎமில் பணம் எடுக்க உதவுவது போல் பெண்ணை ஏமாற்றி 56 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த இளைஞரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். செங்குறிச்சியை சேர்ந்த கலைச்செல்வி ஏடிஎமில் பணம் எடுப்பதற்காக அருகில் இருந்த நபரை உதவுமாறு அனுகியுள்ளார். இதை பயன்படுத்திக்கொண்ட அந்த இளைஞர், ஏடிஎம் பின் நம்பரை அறிந்துக்கொண்டு பணம் வரவில்லை என போலி கார்டை கொடுத்துவிட்டு  பின் அந்த கார்டை பயன்படுத்தி 56 ஆயிரம் எடுத்துள்ளார். இதுதொடர்பாக … Read more

“நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்துகிறது ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்வு” – தமிழிசை பெருமிதம்

புதுச்சேரி: “நாட்டில் ஒன்றுபட்ட தன்மையை, ஒற்றுமையை வலியுறுத்துவதாக சாசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வு இருக்கிறது” என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழுக்கும் காசிக்கும் இருக்கும் கலாச்சார, ஆன்மிக, சமூக இணைப்பை போற்றும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரியில் இருந்து சுமார் 300 பேர் பங்கேற்பதற்காக காசிக்கு பதிவு செய்து உள்ளனர். தமிழுக்கும் காசிக்கும் உள்ள இணைப்பை வலியுறுத்தும் ஆன்மிகத் தலமாக திருக்காஞ்சி விளங்கி வருகிறது. ஆகையால் … Read more

''இருடா வெளியில வந்து வச்சிக்கிறேன் எல்லாரையும்'' – சவுக்கு சங்கர் ஆக்ரோஷம்

திமுக தலைவர் , அவரது குடும்ப உறுப்பினர்கள் காட்டி வரும் செல்வாக்கு, ஊழல், கமிஷன் என்பதை பற்றி யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்ந்து பேட்டி அளித்து வந்தார். ஆதாரமே இல்லாமல் தமிழக அரசை குறித்தும் அமைச்சர்களை குறித்தும் சவுக்கு சங்கர் அவதூறாக பேசி வருவதாக உ.பிக்கள் கடுப்பாகி வந்தனர். மேலும், பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, அதிமுக என பிரதான அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் விமர்சித்தும் வந்தார் சவுக்கு சங்கர். இதில், அவருக்கு திமுக மீதே … Read more

பிரியா மரண வழக்கு: மருத்துவர்களின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவு!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா, கால் முட்டியில் ஏற்பட்ட ஜவ்வு கிழிவு காரணமாக பெரியார்நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பின்னும் குணமடையாததால், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது கால் அகற்றப்பட்டது. தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 15ம் தேதி மரணமடைந்தார். பெரியார்நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தவறான சிகிச்சை … Read more

பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து 224.64 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் முதல் போக சாகுபடி  நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் பொருட்டு 20.11.2022 முதல் 29.03.2023 வரை 130 நாட்களுக்கு மொத்தம் 224.64 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர்  திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் உள்ள புதச்சு மற்றும் பாலசமுத்திரம் ஆகிய கிராமங்களில் உள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

சேலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் அரியானூர் அருகே இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரில், தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த நிர்மல்குமார் என்ற மாணவர் பிசியோதெரபி துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ள்ளார். இவர் வீரபாண்டியில் உள்ள விடுதி ஒன்றில் சக மாணவர்களோடு அறை எடுத்து தங்கி பயின்று வந்துள்ளார்.  நேற்றிரவு மாணவர் நிர்மல்குமார் வழக்கம்போல் … Read more

ஆதார் இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து? செந்தில் பாலாஜி விளக்கம்

ஆதார் இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து? செந்தில் பாலாஜி விளக்கம் Source link

கேள்வித் தாளில் குளறுபடி.. பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ரத்து..!

சென்னை பல்கலைக்கழக 3-வது செமஸ்டர் தேர்வுக்கான கேள்வித்தாளில் குளறுபடி நடந்துள்ளதால், குறிப்பிட்ட செமஸ்டர் தேர்வு மட்டும் ரத்து செய்யப்பட்டு பின்னர் நடத்தப்படும் என சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கெளரி தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், … Read more

“கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது”- நீதிபதிகள் வேதனை

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 2019 – 2020ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகளை திரும்ப பெறக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள், கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது? என கேள்வி எழுப்பியதோடு, விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டதாக கூறினர். மேலும், கலைத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விருது, தற்போது 2 படங்களில் நடித்துவிட்டால் அவர்களுக்கு விருது வழங்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டதாக கருத்து தெரிவித்த … Read more