ஆதார் இணைப்புக்கு பிறகே மின் கட்டணம் வசூல் – 2 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்தது தமிழ்நாடு மின்சார வாரியம்

சென்னை: ஆதார் இணைப்புக்குப் பிறகே மின் கட்டணம் வசூலிப்பதற்கு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் கட்டணம் செலுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு, நுகர்வோருக்கு 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக வருவாய்ப் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் கே.மலர்விழி, அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணையவழியிலும், … Read more

மின்சாரம் தாக்கி கர்ப்பிணி மனைவி சாவு புதைகுழியில் சடலம் மீது அமர்ந்து நிர்வாண பூஜை செய்த கணவன்: திருப்பத்தூர் அருகே பரபரப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி இறந்த 5 மாத கர்ப்பிணி மனைவியின் சடலத்தின் மீது உப்பு போட்டு அமர்ந்து அகோரிபோல கணவன் நிர்வாண பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சின்ன பசலிகுட்டையைச் சேர்ந்தவர் ராஜாதேசிங்கு. இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு பூர்ணிமா (25) என்பவருடன் திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பூர்ணிமா, கடந்த 22ம் தேதி மாட்டு கொட்டகையை வாட்டர் … Read more

ஏஜெண்ட் கண்ணாயிரம், பட்டத்து அரசன்.. நவம்பர் 25-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?

ஏஜெண்ட் கண்ணாயிரம், பட்டத்து அரசன்.. நவம்பர் 25-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன? Source link

திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவர் கலிகண்ணன் வெட்டி படுகொலை! கொலையாளிகளை கைது செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திருப்பத்தூர் மாவட்ட நகர பாஜக துணை தலைவர் கலிகண்ணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமியின் மகன் கலிகண்ணன். இவர் திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வேப்பாலம்பட்டி என்ற இடத்தில் வெங்கடேஸ்வரா கிரஷர் என்ற பெயரில் ஜல்லி உடைக்கும் நிறுவனத்தின் அருகில் இன்று காலை ஆள் நடமாட்டம் இல்லா … Read more

சீர்காழி மக்களுக்கு அரசின் ரூ.1000 நிவாரணத் தொகை போதுமானதல்ல: ஜி.கே.வாசன்

சென்னை: “அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதி மக்களுக்கு போதுமானது அல்ல. அவர்களுக்கு ரூ.3000-லிருந்து ரூ.5000 வரை கொடுக்க வேண்டும்” என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசியது: “மயிலாடுதுறையில் நேற்று நான் சென்று பார்த்தபோதுகூட, பயிர்கள் எல்லாம் அழிந்து நாசமாகியிருந்ததை காணமுடிந்தது. … Read more

கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் பிறழ் சாட்சியான இளம்பெண்ணை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும்: யாரும் சந்திக்கவோ, பேசவோ அனுமதிக்க கூடாது என உத்தரவு

மதுரை: கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் பிறழ் சாட்சியான ஸ்வாதி என்ற இளம்பெண்ணை ஆஜர்படுத்த வேண்டும்.  அவருடன் யாரும் சந்திக்கவோ, பேசவோ அனுமதிக்க கூடாது என்றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த ஸ்வாதி என்ற இளம்பெண்ணை காதலித்தார். கடந்த 23.6.2015ல் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பின்னர் சிபிசிஐடி போலீசார், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 17 … Read more

நீலகிரி: ராணுவ வெடிமருந்து தொழிற்சாலையில் தீ விபத்து – 2 பேர் படுகாயம்

நீலகிரி மாவட்டத்தில் ராணுவ வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காட்டில் ராணுவ வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் உள்ள மருந்து தயாரிக்கும் பகுதி அருகே செட் அமைப்பதற்காக குழாய்கள் எடுத்து செல்லப்பட்டு ஊழியர்கள் வெல்டிங் பணியில் … Read more

பணி மாறுதலில் சென்றவரை ‘சென்னை மாநகராட்சி துணை ஆணையர்’ என்று குறிப்பிட்ட அரசிதழ்

சென்னை: சென்னை மாநகராட்சியில் இருந்து 6 மாதத்திற்கு முன்பு பணியிட மாறுதலில் சென்ற அதிகாரியை, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் என்று குறிப்பிட்டு தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும். இதற்காக அமைக்கப்படும் குழுவில் தொழிலாளர் நலத் துறை, அரசு மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரநிதிகள் இடம்பெறுவார்கள். இதன்படி, தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைக்க … Read more

 அருவங்காடு வெடிமருந்து ஆலையில் மீண்டும் வெடி விபத்து

குன்னூர்: அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு பகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் கார்டைட் எனப்படும் புகையில்லா வெடிமருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 1,500 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 19ம் தேதி தொழிற்சாலையில் சிடி செக்சனில் பலத்த சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்தது. அப்போது அந்த பிரிவில் 8 பேர் பணியாற்றியுள்ளனர். … Read more