#சென்னை | தமிழக அரசின் குளிர்சாதன பேருந்தில் புகை – அலறியடித்து தப்பிய பயணிகள்!

தாம்பரம் அருகே பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அரசு குளிர்சாதன பேருந்தில் திடீரென புகை ஏற்பட்டதால் பயணிகள் அலறியடித்து கொண்டு தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்று மாலை 6.45 மணிக்கு, தாம்பரம் பகுதியில் வந்து கொண்டிருந்த தமிழக அரசின் குளிர்சாதன பேருந்தின் மேற்கூரையில் இருந்து புகை வந்துள்ளது. புகை வருவதை கண்ட பயணிகள் அலறி கூச்சல் இடவே, உடனடியாக பயணிகள் இறக்கி விடப்பட்டனர். மேலும், பேருந்தில் ஏற்பட்ட புகையை தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் தாம்பரம் பகுதியில் … Read more

மதுரை அருகே கி.பி 16-ம் நூற்றாண்டு நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை: மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே மோதகம் பகுதியில் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான நடுகல் கண்டறியப்பட்டது. மோதகம் கரையாம்பட்டி பூசாரி முத்துசாமி, தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக அளித்த தகவலின்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் து.முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமணமூர்த்தி, ஆய்வாளர்கள் அனந்தகுமரன், தமிழ் செல்வம் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். இதில் கிபி 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த … Read more

குட்டி சைக்கிளில் சிறுவன்.. தட்டி தூக்கிய எம்எல்ஏ வாகனம்!

தென்காசி சட்ட மன்ற தொகுதி உறுப்பினராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழனி நாடார் இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான டிராக்டர் அதேப் பகுதி கீழ சுரண்டை அருகே உள்ள குளங்களில் இருந்து மணல் எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தது. கீழ சுரண்டை பிள்ளையார் கோவில் தெருவில் வந்தபோது, தனது குட்டி காருடன் விளையாடிக் கொண்டு இருந்த 4 வயது சிறுவன் ராஜமுகன் திடீரென டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடி.. துடித்து உயிரிழந்தான். இதை பார்த்ததும் குழந்தையின் … Read more

மஞ்சூர் அருகே வாகனம் மோதி சிறுத்தை பலி

மஞ்சூர்: மஞ்சூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலியானது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மேல்குந்தா தாய்சோலை இடையே உள்ளது புலிசோலை வனப்பகுதி. இப்பகுதியில் சிறுத்தை, கரடி, காட்டுமாடு, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக சிறுத்தைகள் அதிகளவில் உள்ளதுடன் அவ்வப்போது இரை தேடி அவரை அருகில் உள்ள கிராமங்களுக்குள் ஊடுருவுகின்றன. இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 7 மணியளவில் புலிசோலை அருகே சாலையில் சிறுத்தை ஒன்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. … Read more

"இடைதரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்" – டின்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சமூக வலைதளங்களில் பரவும் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தேர்வு முடிவுகளை நம்ப வேண்டாம். அதை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  கடந்த 2- 7- 2022 அன்று நடத்தப்பட்ட ஒருகிணைந்த பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இவ்வாறு பரப்பப்படும் போலியான் தகவல்களை நம்பி இடைதரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள … Read more

விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு – இ.பி.எஸ் புகார்; தமிழக அரசு மறுப்பு

விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு – இ.பி.எஸ் புகார்; தமிழக அரசு மறுப்பு Source link

இளைஞர்களே தயாரா இருங்க.. தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் வேலைவாய்ப்பு மையம் … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பிறழ்சாட்சியாக மாறிய பெண்ணை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு

மதுரை: பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய இளம்பெண்ணை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ள உயர் நீதிமன்றம், அவரை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடன் படித்த நாமக்கலை சேர்ந்து வேறு சமூக பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 23.6.2015-ல் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் கிழக்கு … Read more

திருச்சி சூர்யா சிவா பாஜகவில் இருந்து நீக்கம்… தொடரும் அண்ணாமலையின் அதிரடி ஆக்ஷன்!

தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யா சிவாவுக்கும், கட்சியின் பெண் நிர்வாகியான டெய்சி சரணுக்கும் இடையே நடந்த காரசாரமான உடையாரல் அடங்கிய வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது. அதில் டெய்சி சரணை, திருச்சி சூர்யா சிவா மிகவும் கேவலமாக பேசியிருந்தது தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ விவகாரம் குறி்த்து தன்னிச்சையாக கருத்து தெரிவித்த காயத்ரி ரகுராம், கட்சியில் இருந்து 6 மாத காலம் நீக்கப்படுவதாக அண்ணாமலை … Read more

கார்த்திகை தீப திருவிழாவிற்கு மெழுகு விளக்குகள் தயாரிப்பு விறுவிறுப்பு

மானாமதுரை: இடைக்காட்டூரில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு மெழுகு விளக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கார்த்திகை மாதம் முருகன் பிறந்த நாளான திருக்கார்த்திகையை முன்னிட்டு வீடுகளில் அகல்விளக்குள் ஏற்றுவது வழக்கம். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நூற்றாண்டுகளாக மண்விளக்குகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் மெழுகு விளக்குகள் தயார் செய்யப்படுகிறது. இந்த விளக்குகள் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது. மனதை கவரும் வகையில் பலவண்ணங்களில் இந்த … Read more