வேதனை.. பெட்டி பெட்டியாக தக்காளிகளை சாலையோரம் கொட்டிச் செல்லும் விவசாயிகள்..!
கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாச்சிபாளையத்தில் காய்கறி கமிஷன் மண்டிகள் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு நாச்சிபாளையத்தை சுற்றியுள்ள வழுக்குபாறை, வேலந்தாவளம், கண்ணமநாயக்கனூர், திருமலையம் பாளையம், பிச்சனூர், சொக்கனூர், அரிசிபாளையம், பாலத்துறை, மதுக்கரை போன்ற பகுதியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வருகின்றனர். குறிப்பாக தக்காளி அதிகளவில் வருகிறது. கடந்த சில தினங்களாக மார்க்கெட்டில் தக்காளியின் விலை கடுமையாக குறைந்தே காணப்பட்டது. இதனால் … Read more