மத்திய அரசு நிருபர் என்று கூறி பல இடங்களில் கைவரிசை காட்டிய போலி நிருபர் கைது..!

கள்ளக்குறிச்சியில் போலி நிருபர் ஒருவரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர். சின்ன சேலம் அருகே உள்ள பங்காரம் காட்டுக்கொட்டகையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அரசு அதிகாரிகளிடம் தன்னை மத்திய அரசு செய்தியாளர் எனவும், தனக்கு மத்திய அரசு முத்திரையுடன் இரண்டு கார்கள் கொடுத்துள்ளதாகவும் கூறி ஏமாற்றியுள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் தனது நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் அதன் உரிமையாளர் வேல்முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,888 பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 16,888 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். இதுகுறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில், அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், துறைச் செயலர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு, சென்னை மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி பைபாஸ் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் … Read more

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(11.10.2022) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று(11.10.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

`தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கிறார் முருகன்… உடனே சிகிச்சை கொடுங்க’-நளினியின் தாயார் மனு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் முருகன் வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதால், அவருக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முருகனின் மாமியாரும், நளினியின் தாயாருமான பத்மா தாக்கல் செய்துள்ள மனுவில், சிறையில் உள்ள முருகனை அவரது வழக்கறிஞர்கள் அண்மையில் சந்தித்த போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 32 நாட்களாக அவர் உண்ணாவிரதம் இருப்பதால், உடல் எடை குறைந்து … Read more

மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப பொதுமக்கள் காத்திருக்கிறார்கள் – தமிழ்மகன் உசேன்

மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப பொதுமக்கள் காத்திருக்கிறார்கள் – தமிழ்மகன் உசேன் Source link

கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று குறிப்பிட்ட மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.!

கன மழை காரணமாக இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக  பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 11) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அறிவித்துள்ளார். Source link

கொதிக்கும் எண்ணெயில் விழுந்து மீன் வியாபாரி பலி!!

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியை சேர்ந்த கண்ணன் (40) என்பவர் அதே பகுதியில் மீன் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் அந்த பகுதியில் வழக்கமாக செல்லும் டீ கடைக்கு டீ குடிக்க சென்றார். டீ குடித்தவர் கடையில் இருந்து வெளியே வந்தபோது அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. அவருக்கு திடீரென கால் வழுக்கியதில் அருகில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் விழுந்து அலறி துடித்தார். இதைத் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் பலத்த தீக்காயம் அடைந்த அவரை … Read more

அமைச்சர்கள், நிர்வாகிகளால் சங்கடம் – திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்த பின்னணி?

சென்னை: திமுக பொதுக்குழுவில் தன் நிலை குறித்து தெரிவித்து, நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலினின் பேச்சு, திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் அமைப்பு ரீதியான தேர்தல் முடிந்த நிலையில், நேற்று முன்தினம், பொதுக்குழு கூடியது. இதில், திமுக தலைவராக 2-வது முறையாக போட்டியின்றி தேர்வானார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கூட்டத்தில் வாழ்த்துரைகள், ஏற்புரைகளுக்குப்பின், நிறைவாகப் பேச வந்தார் ஸ்டாலின். பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரை மதிப்புக்குரியவர்கள் என்று உயர்த்திய அவர் பேச்சு ஒரு கட்டத்தில் மாறியது. … Read more

முடிவை மாற்றிய டெல்லி: எடப்பாடிக்கு இனி சிக்கல் தான்!

ஜெயலலிதா உயிரோடிருந்த வரை பாஜகவை, மத்திய அரசை வந்து பார் என தனது செயல்பாடுகளால் மிரட்டி வந்தார். அவர் மறைந்த பின்னர் நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. அதிமுகவில் நடக்கும் ஒவ்வ்வொரு சின்ன அசைவும் டெல்லியின் வழிகாட்டுதலின் பேரிலேயே எடுக்கப்பட்டது. துக்ளக் குருமூர்த்தி இதை வெளிப்படையாகவே இதற்கு முன்னர் பேசினார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தற்காலிகமாக ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றாலும், கட்சியும், ஆட்சியும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என எண்ணிணார். அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் … Read more