சட்டம் ஒழுங்கு போலீசாரே விசாரிப்பதால் தொய்வு கொலை வழக்குக்கு தனிப்பிரிவு: டிஜிபி அறிக்கையளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மதுரை: கொலை வழக்கு விசாரணைக்கு என தனிப்பிரிவை ஏற்படுத்துவது குறித்து டிஜிபி தரப்பில் அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம், அரியமங்கலம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சதீஷ் குமார், சங்கர், மற்றொரு சதீஷ்குமார் ஆகியோருக்கு கடந்த 2017ல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 3 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்திருந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட் கிளை 3 பேரையும் விடுதலை செய்தது. மேலும் காவல்துறைக்கு பல்வேறு … Read more