12 மாநிலங்கள் வழியாக காஷ்மீர் வரை நடைபயணம்: குமரியில் இருந்து ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே இருந்து இன்று (7ம் தேதி) மாலை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் … Read more

தருமபுரி: 2 குழந்தைகளுடன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட தாய்!

தருமபுரி மாவட்டத்தில் தாய், இரண்டு குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த தொட்டபாவளி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி மணிகண்டன்-லட்சுமி தம்பதியினருக்கு பிரசாந்த் (4), லதா (6 மாதம்) என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன், லட்சுமி தனது இரு குழந்தைகளுடன் வீட்டு விட்டு வெளியில் சென்றதாக கூறி, அவரது … Read more

விவேகானந்தர் நினைவிடம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட ராகுல் காந்தி

கன்னியாகுமரி: ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்கிறார்.இதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து, கன்னியாகுமரி வந்தடைந்தார். நடைபயணத்தை தொடங்குவதற்கு முன்னர், பூம்புகார் படகுப் … Read more

நடத்துநர்களுக்கு இலக்கு நிர்ணயிப்பதா? ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் ஒரு கட்டமாக நடத்துநர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் அதற்கு மாறாக நடத்துனருக்கு இலக்கு நிர்ணயித்து கொடுமைப்படுத்த வேண்டாம் என பாமக நிறுவனர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு பேருந்தின் மூலமும் ஒவ்வொரு சுற்றுமுறைக்கும் (ஷிஃப்ட்) ஒரு குறிப்பிட்ட தொகையை வருவாயாக ஈட்ட வேண்டும் என்று போக்குவரத்துக் … Read more

நீட் தேர்வு முடிவுகள்; மாணவர்களை திட்ட வேண்டாம் என அமைச்சர் மா.சுபரமணியன் வேண்டுகோள்

சென்னை சைதாப்பேட்டையில் மார்க்கெட்டை ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் மா.சுபிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை சைதாப்பேட்டை மார்க்கெட் என்பது வரலாற்று சிறப்புமிக்க வணிக வளாகப் பகுதி. தற்போது மார்க்கெட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளதால் இங்கு கடை வைத்திருப்பவர்களுக்கு மாற்று இடத்தில் ஒரு மாத காலத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த பிறகு மீண்டும் அவர்களுக்கான கடைகள் வழங்கப்படும் .  நீட் தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு  அதிமுக அரசு ஒப்புதலின் … Read more

பேராலய ஆண்டு பெருவிழா; வேளாங்கண்ணியில் இன்றிரவு தேர் பவனி: நாகையில் நாளை உள்ளூர் விடுமுறை

நாகை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இன்றிரவு தேர் பவனி நடக்கிறது. இதில் பங்கேற்க ஆலயத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலகப்புகழ் பெற்றது. இது கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஆண்டு தோறும் பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு பெருவிழா கொடியேற்றம் கடந்த … Read more

”என்ன மன்னிச்சிடுங்க”.. பேருந்தில் விட்டுச் சென்ற தன் குழந்தைக்காக மனம்திருந்தி வந்த பெண்!

தருமபுரி பேருந்து நிலையத்தில் குழந்தையை விட்டு சென்ற இளம்பெண், மனம் திருந்தி குழந்தையை தேடி வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து, காவல் துறையினர் அவரை எச்சரித்து குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர். தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிகோட்டையில் இருந்து தருமபுரிக்கு வந்த அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி செல்ல தயாராக இருந்தது. அந்த பேருந்து இருக்கையில் இரண்டு வயதுள்ள பெண் குழந்தை இருந்துள்ளது. பின்னர் பேருந்து … Read more

நாமக்கல்: தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு.!

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் வேப்பநந்தம்புதூர் பகுதியை சேர்ந்தவர் தச்சு தொழிலாளி பொன்னுசாமி (வயது 59). இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பொன்னுசாமி நேற்று பி.மேட்டூரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு, இரவு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆண்டகளூர் கேட் அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து … Read more

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், வரும் 15ஆம் தேதி மதுரையில் துவக்கம்

காலை சிற்றுண்டி திட்டம் – 15ந் தேதி துவக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், வரும் 15ஆம் தேதி மதுரையில் துவக்கப்பட உள்ளதாக தகவல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான காலை சிற்றுண்டி திட்டத்தை, செப்.15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார் Source link

சுத்துது… சுத்துது… சுத்திக்கிட்டே இருக்கு – பத்திரப்பதிவு துறையில் தொடரும் சர்வர் பிரச்சினை

தமிழகம் முழுவதும் தொடரும் சர்வர் பிரச்சினையால் பத்திரப்பதிவு தாமதமாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் முக்கிய துறை பத்திரப்பதிவு துறையாகும். இத்துறையில் வீட்டுமனை விற்பனை பதிவு, விவசாய நிலம் விற்பனை பதிவு, திருமண பதிவு, வில்லங்க சான்றிதழ் விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆன்லைன் வழியாக நடைபெறுகின்றன. பத்திரப்பதிவு துறையில் பதிவுக்காக பயன்படுத்தப்படும் சர்வரின் வேகம் கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. பதிவுத்துறை சர்வருக்குள் நுழைந்தால் அடுத்தடுத்து பக்கங்களுக்குள் … Read more