நாமக்கல்: தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு.!
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் வேப்பநந்தம்புதூர் பகுதியை சேர்ந்தவர் தச்சு தொழிலாளி பொன்னுசாமி (வயது 59). இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பொன்னுசாமி நேற்று பி.மேட்டூரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு, இரவு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆண்டகளூர் கேட் அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து … Read more