கோயம்பேடு மார்க்கெட்.! (13.10.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 13/10/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 26/24/20 நவீன் தக்காளி 35 நாட்டு தக்காளி 34/32 உருளை 34/24/22 சின்ன வெங்காயம் 65/60/50 ஊட்டி கேரட் 70/55/50 பெங்களூர் கேரட் 35/30 பீன்ஸ் 50/45 பீட்ரூட் ஊட்டி 60/55 கர்நாடக பீட்ரூட் 45 சவ் சவ் 20/18 முள்ளங்கி 25/20 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 18/15 உஜாலா கத்திரிக்காய் 16/13 வரி … Read more

வரும் 15-ம் தேதி இந்தி திணிப்பை கண்டித்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் “மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம்” ..!!

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முற்படுகிறது. இது பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைத்து, ஒருமை தன்மையாக்க நினைக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்துள்ள அறிக்கையில் (11வது … Read more

கடன் வாங்கிய முன்னாள் பாஜக பிரமுகரின் படத்தை ஆபாசமாக சித்தரித்ததாக ஆன்லைன் லோன் ஆப் மீது மோசடி புகார்!

சென்னையில் கடன் திருப்பிச் செலுத்த கால தாமதமானதால், பாஜக பிரமுகர்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்ததாக ஆன்லைன் லோன் ஆப் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த டெல்லி கோபி, போலீசில் அளித்த புகாரில், கடந்த 4-ஆம் தேதி deck loan, slog loan என்ற ஆன்லைன் லோன் ஆப் மூலமாக 5,000 ரூபாய் கடன் பெற்றதாகவும், அதனை திருப்பிச் செலுத்த தாமதமானதால் பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய நபர்களுடன் தனது புகைப்படத்தை இணைத்து ஆபாசமாக … Read more

போக்குவரத்து நெரிசலை குறைக்க 5 மேம்பாலங்கள்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், அடையாறு, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மஞ்சம்பாக்கம், காட்டுப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் மேம்பாலங்களை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையில், இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்டப்பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அடையாறு, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மஞ்சம்பாக்கம், காட்டுப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் … Read more

மதுரையில் மழை பாதிப்புகள்; ஸ்டாலினுக்கு அட்வைஸ் பண்ண ஆர்.பி.உதயகுமார்!

மதுரையில் 3 நாட்களாக கனமழை பெய்ததன் காரணமாக மாட்டுத்தாவணி அருகே பாசன வாய்க்கால்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. இதனால் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்தன. இவற்றை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் மழை நீரால் பாதிக்கப்பட்ட பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்யும் 50க்கும் மேற்பட்ட வட மாநில மக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், கழக … Read more

 பூப்பறிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த பெண்- 32 மணி நேரத்திற்குப் பிறகு சடலமாக மீட்பு

அரியலூரில் பூப்பறிக்கச் சென்றபோது 90 அடி ஆழமுள்ள கிணற்றில் பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவருடைய மகள் ஹெல்வினா சைனி (18). இவர், நேற்று (11 ஆம் தேதி) மதியம் அவர்களின் கொல்லையில் பூப்பறிக்கச் சென்றுள்ளார். இதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், லாரன்ஸ் கொல்லையில் சென்று பார்த்த போது கிணற்றில் செப்பல் மற்றும் துப்பட்டா கிடந்துள்ளது. மழை பெய்ததால் மகள் கிணற்றில் … Read more

தமிழகத்தில் இன்று (அக்டோபர் – 13) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (அக்டோபர் 13) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை  சென்னை ஆவடி பகுதிகளான சி.டி.எச்.ரோடு, காந்தி நகர், கவரபாளையம், பெரியார் தெரு புழல் கதிர்வேடு முழுவதும், சீனிவாசா நகர், ஜே.பி.நகர், புத்தகரம், சூரபேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. திருவேற்காடு … Read more

உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பெற்ற தீபக் சாஹர் விலகல்..!!

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்று விளையாடுவதால் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த உலககோப்பை தொடரானது இம்முறை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறவுள்ளதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் நேரடியாக சூப்பர்12 … Read more