தேனி || பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.! போகோவில் கல்லூரி மாணவர் கைது.!

தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் மகாவிஷ்ணு(21). இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மகாவிஷ்ணு, தென்றல் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார்.  மேலும் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மகாவிஷ்ணு, தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் மாணவி … Read more

விருதுநகரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்

விருதுநகர்: விருதுநகரில் 2 லட்சம் சதுர அடியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.15) அடிக்கல் நாட்டினார். மதுரையில் பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதைத் தொடங்கிவைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் வந்தார். மாவட்ட எல்லையான கே.உசிலம்பட்டி பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர். Source … Read more

காலை உணவுத் திட்டம்: பெரிய மாற்றத்துக்கான தொடக்கம் – அண்ணாவுக்கு செயல் மூலம் புகழஞ்சலி!

அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் அவரது உரைகள், முன்னெடுத்த திட்டங்கள், தொலைநோக்கு சிந்தனை, அண்ணா குறித்த பிற தலைவர்களின் மேற்கோள்கள் என பலரும் பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சரான அண்ணா நவீன தமிழ்நாட்டுக்கான விதை விதைத்தவர். அவரது பிறந்தநாளில் முதல்வர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கியிருப்பது வரவேற்பை பெற்று வருகிறது. முழுக்க முழுக்க தமிழக அரசின் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பசியை போக்குவது இன்றியமையாத பணி. இந்த … Read more

TN Weather Report: உங்கள் ஊரில் மழை பெய்யுமா? இதோ வானிலை தகவல்

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பின்வரும் வானிலை மாற்றங்கள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15.09.2022 மற்றும் 16.09.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17.09.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் … Read more

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நரிக்குறவர்கள் நன்றி: பாசிமணி மாலை அணிவித்து மகிழ்ச்சி..!!

விருதுநகர்: விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நரிக்குறவர் மக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி கூறினர். விருதுநகர் அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த சந்திப்பின்போது அவர்களுடன் முதல்வர் தேநீர் அருந்தினார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நரிக்குறவர்கள் பாசிமணி மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மலை பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் … Read more

நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்குச் செல்வேன் – சசிகலா

நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்குச் செல்வேன். ஏழை எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த நல்ல திட்டங்களை திமுக நிறுத்துவது நல்லதல்ல என சசிகலா தெரிவித்தார். தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம். நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என்றவரிடம்…. பன்னீர் செல்வத்தை நேரில் எப்போது சந்திப்பீர்கள் … Read more

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் | நீண்ட கால சமூக அநீதி சரி செய்யப்பட்டிருக்கிறது: அன்புமணி

சென்னை: “தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்களை பழங்குடியினராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்களை பாமக நடத்தியிருக்கிறது.பாமகவின் நீண்டகால கோரிக்கை இப்போது செயல்வடிவம் பெற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதற்கு காரணமான பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. நரிக்குறவர், … Read more

சுகாதாரமான குடிநீர் வேண்டி கிணற்றில் இறங்கி போராடிய பொதுமக்கள்

சேலம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தாசநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ளது காமராஜர் காலனியில் சுமார் 400 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளில் இருந்து கழிப்பிட நீர் நேரடியாக நிலத்திற்குள் திறந்து விடுவதால் பொதுமக்கள் தெரிவித்தனர்.  இதனால் அங்கு உள்ள கிணறு முழுவதும் மாசடைந்து புழு நிறைந்து குடிநீர் முழுவதும் மாசடைந்து உள்ளது. இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர், … Read more

நீலகிரி மாவட்டத்தில் 16 செக்போஸ்ட் வழியாக போதை பொருள் கடத்தலை தடுக்க என்எஸ்டி சிறப்பு குழு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய என்எஸ்டி., சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு 16 எல்லையோர சோதனை சாவடிகளில் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவின் வயநாடு, மலப்புரம் மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளன. நீலகிரி மாவட்டம் கேரளாவை ஒட்டி அமைந்துள்ளதால் நீலகிரிக்குள் நுழையாத வகையில் தமிழக அதிரடி படையினர் மற்றும் தலா 13 காவலர்கள் அடங்கிய ஒமேகா-1 மற்றும் ஒமேகா- 2 … Read more

ஓமலூர்: சாலை விபத்தில் உயிரிழந்த மனைவி: சோகத்தில் கணவன் தற்கொலை

ஓமலூர் அருகே விபத்தில் மனைவி இறந்த சோகத்தில், கணவன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோட்டைமேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும் திலீபன், ஹரிஹரன் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். சிவகுமார் கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். இவரது மகன்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், சிவகுமாரின் மனைவி சிவகாமி கடந்த மாதம் … Read more