டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு சிறப்பு வரவேற்பு

செய்யூர்: டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும், மாநில  அளவில் பள்ளிகளில் சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பாக சேவையாற்றிய 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்டது. இந்த 10 பேரில் மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள சாலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கவிதாவும் ஒருவர். இந்நிலையில், விருது பெற்ற தலைமை ஆசிரியை … Read more

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா; ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

சென்னை: ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். தமிழக அரசின் ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு’ 393 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் நேற்றுநடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் விருது, ரூ.10 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினர். விழாவில், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார் வரவேற்றார். முதன்மைச் செயலர் காகர்லா உஷா விளக்க உரையாற்றினார். … Read more

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்தது: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம், வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்தது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எம்பிசி – சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த நான், எம்எஸ்சி, எம்.எட் முடித்துள்ளேன். முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் நியமனம் தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு ஆசிரியர் தேர்வாணையத்தால் வெளியானது. இதில் நான் பங்ேகற்றேன். இதில், 150க்கு 87.17 மதிப்பெண் … Read more

அப்போ அ.தி.மு.க; இப்போ தி.மு.க: ஒரு வழியாக முடிவுக்கு வந்த மணப்பாறை நகராட்சி பஞ்சாயத்து

மணப்பாறை நகராட்சி தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கீதா மைக்கேல்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் மணப்பாறை நகராட்சியை திமுக மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மணப்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் அதிமுக 11 வார்டுகளிலும், திமுக கூட்டணியுடன் சேர்த்து 11 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தது. சுயேச்சைகள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றனர். அவர்கள் ஐந்து பேரும் திமுகவில் சீட்டு கிடைக்காமல் சுயேச்சையாக நின்று … Read more

புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கினார் முதல்வர்: உதவி தொகையை கல்விக்காக மட்டுமே செலவிட வேண்டும் என அறிவுறுத்தல்

சென்னை: அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த தொகையை மாணவிகள் கல்விக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். தமிழக அரசின் சமூக நலத்துறைசார்பில், ‘புதுமைப்பெண்’ என்றபெயரில் மூவலூர் ராமாமிர்தம்அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. சென்னை பாரதி மகளிர் … Read more

சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு தூய்மை பணி

செய்யூர்: சித்தாமூர் ஒன்றிய அலுவலகத்தில், ‘நம்ம ஊரு சூப்பரு’ தூய்மை பணி துவக்க விழா  நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில், ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தூய்மைபடுத்தும் பணிக்கான துவக்க விழா சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில், ஒன்றிக்குழு பெருந்தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், தங்கராஜ் … Read more

ஒகேனக்கல் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: 1.36 லட்சம் கன அடியாக நீர்வரத்து உயர்வு

தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்வதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் இன்று (செப்.6) காலை நீர் வரத்து 1.36 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடகா மாநிலத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, தமிழகத்தை நோக்கி காவிரியாற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று(5-ம் தேதி) காலை நிலவரப்படி விநாடிக்கு 43 ஆயிரம் கன … Read more

இலங்கை கடலோர காவல்படை அட்டூழியம்: காரைக்கால் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடலோர காவல்படையினர் சிறை பிடித்தனர். காரைக்கால் அடுத்த கீழ காசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் உலகநாதன் (28). இவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கீழ காசாகுடி மேடு பகுதியை சேர்ந்த கார்த்தி, செல்வமணி, அசோகன், மதன், அபிஸ், மணிவண்ணன் உட்பட 12 மீனவர்கள் நேற்றுமுன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் நேற்று மாலை முல்லைத்தீவு அருகே இந்திய கடற்பரப்பில் மீன் … Read more

தோழர் விஜயன், சகோதரன் ராகுல், விருந்தாளி கெஜ்ரிவால்: மு.க. ஸ்டாலினின் அன்பு சாம்ராஜ்யம்!

தி.மு கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது சகாக்கள் மற்றும் பிற தலைவர்களுடன் பகிரங்க நட்பு பாராட்டுகிறார்.அண்மையில் இவர் கேரளா சென்றிருந்தபோது, கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை என் அன்பான தோழர் என அழைத்தார். ராகுல் காந்தியை என் சகோதரன் என கூப்பிடுகிறார். தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவிகள் தொடங்கிவைக்க வைத்த அரவிந்த் கெஜ்ரிவாலை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார். அந்த வகையில் மு.க. ஸ்டாலின் மற்ற தலைவர்களுடன் தனித்து காணப்படுகிறார்.2021 பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் … Read more

முடிவெட்ட சென்ற இடத்தில், வேலையை காட்டிய  வட மாநில நபர்.. சற்று நேரத்தில் நிகழ்ந்த விபரீதம்.! 

காட்பாடி வணிக வளாகத்திற்கு அருகில் கடந்த ஆகஸ்ட் 22 -ல் ஒரு நபர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த 34 வயதான அபணிசரண்யா என்பது தெரியவந்துள்ளது.  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது குறித்து போலீசாரின் விசாரணையில் அவரை கொன்றது கீழ் பெண்பாக்கம் பகுதியில் சலூன் கடைக்காரரான … Read more