திருப்பதியில் பக்தர்கள் நிரம்பி வழிவதால் இலவச தரிசனத்துக்கு 48 மணிநேரம் ஆகிறது..!!
புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அதன்படி புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையான இன்று (8-ந்தேதி) திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி கோவில் அருகே கோகர்ப்பம் அணை வரை 6 கிலோ மீட்டா் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஷெட்டுகளில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். … Read more