வெளிநாடு பறப்போருக்கு நற்செய்தி.. என்.ஓ.சி இனி எளிதாக பெறலாம்..!

வெளிநாடுகளுக்கு செல்வோர் பாஸ்போர்ட் பெற, காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்த பட்டுள்ளது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து, சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வெளிநாடு செல்லும் இந்திய குடிமக்களுக்கு உதவும் வகையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றை அஞ்சல் நிலையங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற … Read more

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பழனிசாமி திடீர் வருகை: சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து ஆலோசனை

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று திடீரென கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு நடைபெறும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர், கட்சியின் செயல்பாடுகள், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் பழனிசாமி தரப்பில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச … Read more

திமுக ஆட்சிக்கு வந்தால் வெடிகுண்டு கலாச்சாரம் தான்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது; சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழகக் காவல் துறை சட்டப்படி, நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர்; மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவின் ஆட்சியில் இருந்த நிலை. ஆனால், … Read more

ராமஜெயம் கொலை வழக்கில் 2 பேரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டு பேரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது, இதில் ஒருவர் புதுக்கோட்டையை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில், சென்னையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ  பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய, திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில்குமார் ஆகியோரிடம் … Read more

திருவாரூர்: அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு; 4 பேர் கைது

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 3 அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்துச் சென்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 21-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் அங்கு நின்றிருந்த மூன்று அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை கற்களால் உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் திருவாரூர் … Read more

கர்நாடகாவில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு.. சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்?

கர்நாடகாவில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு.. சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்? Source link

நவராத்திரி, தீபாவளிக்காக தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

நவராத்திரி, தீபாவளியை முன் னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தாம்பரம் – நாகர்கோவில் அதி விரைவு சிறப்பு ரயில் (06001) தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 21 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவில் – … Read more

தமிழகத்தை அமளிக் காடாக்கும் பாஜகவின் சதித்திட்டம்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், சமூகநீதியின் நிலைக்களமான தமிழ்நாட்டில், பாஜகவின் சனாதன கொள்கையை நுழைத்துவிட பெரும் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அரசியல் சாசனத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ்ஸின் முழுநேர ஊழியர் போல செயல்படுவதும், சனாதனக் கொள்கையையும், அதை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையையும் பகிரங்கமாக ஆதரித்து பல கூட்டங்களிலும் பேசி வருகிறார். நெடுங்கால சிறைவாசிகள் விடுதலை குறித்த கோப்புகளைக் கிடப்பில் போடும் … Read more

ஆம்பூர்: காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – போராடி தீயை அணைத்த வீரர்கள்

ஆம்பூர் அருகே பரிதா குழுமத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 13 தீயணைப்பு வாகனங்கள் விடிய விடிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியில் பரிதா குழுமத்திற்குச் சொந்தமான (பரிதா ஷூ பிரைவேட் லிமிடெட் பாம்ஸ் யூனிட்) இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சாண்டல்ஸ் மற்றும் செப்பல்ஸ் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இங்கு சுமார் 1000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். … Read more