மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்ற கூலி தொழிலாளியின் மகள்.!

கூலித் தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். கூலித் தொழிலாளியான இவருக்கு ரக்ஷயா என்ற இளம் வயது மகள் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்திருக்கும் ரக்ஷயாவுக்கு, சிறுவயதில் இருந்தே அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டம் பெற வேண்டும் என்று ஆசையும், இலட்சியமும் ஆகும்  பெற்றோர் கொடுத்த ஊக்கம் காரணமாக பகுதி நேர வேலை செய்தும் படித்தும் இதற்காக அவர் தன்னை தயார்ப்படுத்தி வந்துள்ளார். அதன்படி … Read more

அதிமுக அலுவலகத்தில் காணாமல்போன ஆவணங்கள் மீட்பு: ஓபிஎஸ் ஆதரவாளரிடம் இருந்து கைப்பற்றியதாக சிபிசிஐடி தகவல்

சென்னை: அதிமுக அலுவலகத்திலிருந்து காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் தெரிவித்தனர். இரட்டை தலைமையின்கீழ் இயங்கிய அதிமுகவை ஒற்றை தலைமையின்கீழ் கொண்டு வருவதற்காக கடந்த ஜூலை11-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைஅலுவலகத்துக்குள் செல்ல ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்முற்பட்டனர். அவர்கள் அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் அப்போது ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆதரவாளர்கள் … Read more

”மிஸ் இந்தியா வெல்வதே லட்சியம்” – மிஸ் தமிழ்நாடு அழகியாக சாதித்த கூலித் தொழிலாளி மகள்!

சாதித்து காட்டிய கூலித் தொழிலாளியின் மகள்.. மிஸ் தமிழ்நாடு பதட்டத்தை வென்று சாதனை.. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நால்வர் கோயில் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி மனோகர். இவரது மகள் ரக்சயா (20), கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தன்னுடைய சிறு வயது முதல் தான் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு, குடும்ப வறுமையில் இருந்தபோதும் தனது சொந்த முயற்சியில் பகுதிநேர வேலை செய்து தன்னை தயார்ப்படுத்தி கொண்டிருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு … Read more

மது போதையில் மகளை சித்திரவதை செய்த மருமகனை சுத்தியலால் அடித்து கொலை செய்த மாமனார் கைது.!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மது போதையில் மகளை சித்திரவதை செய்த மருமகனை சுத்தியலால் அடித்து கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார். கோவிலாங்குளத்தைச் சேர்ந்த உதயசூரியன் என்பவர் தினமும் மது அருந்திவிட்டு மனைவி காளியம்மாளிடம் பிரச்சனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று வழக்கம் போல தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்ட போது அங்கு வந்த மாமனார் உருவாட்டி கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் தான் … Read more

சென்னை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வரைவு செயல்திட்ட பரிந்துரைகள் தமிழில் இன்று பதிவேற்றம்

சென்னை: சென்னை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வரைவு செயல் திட்டம், இன்று தமிழில் வெளியிடப்படுகிறது. சென்னை மாநகரம் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 மீட்டர் உயரத்துக்குள் உள்ளது. இதனால் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் இயற்கை பேரிடர்களால் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் மாநகரமாக சென்னை உள்ளது. இதையடுத்து, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான செயல் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அதற்கான சில பரிந்துரைகளை உருவாக்கி பொதுமக்களின் கருத்துகளை … Read more

சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துக்களுக்கும் அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மரங்கள் அகற்றியது தொடர்பாக மாதந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை, வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று … Read more

ராஜீவ் காந்தி கொலைவழக்கு: முருகன் 29ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராவார்

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் முருகன். அவர் 19 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை. மீண்டும் 29-ம் தேதி ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமரின் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் மீது அதிகாரிகளை பணி செய்ய விடாத புகாரின் பெயரில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. … Read more

சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் : காவல் உயர் அதிகாரிகள் விசாரணை

சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் : காவல் உயர் அதிகாரிகள் விசாரணை Source link

சமயபுரம் காவல் நிலையத்தில் இளைஞர் மர்ம மரணம் – போலீஸார் தாக்கியதில் இறந்தாரா என விசாரணை

திருச்சி: செல்போன் திருட்டு தொடர்பாக சமயபுரம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீஸார் தாக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தாரா என விசாரணை நடந்து வருகிறது. அரியலூர் மாவட்டம் ஓரியூர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (37). நேற்று அதிகாலை சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களிடம் செல்போன் திருடியதாக கூறி, கோயில் காவலாளிகள் இவரை பிடித்து சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, அங்கு உள்ள விசாரணைக் கைதி அறையில் இவரை அடைத்து வைத்து … Read more

‘இந்து தமிழ் திசை’ வழங்கும் கொலு கொண்டாட்டம் – அக்.1-க்குள் அனுப்பப்படும் சிறந்த கொலு படங்களுக்கு பரிசு

சென்னை: அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் – காஞ்சிபுரம், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் கொலு கொண்டாட்டத்தில் சிறந்த படங்களை அனுப்புவோருக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. நம் வீடுகளில், மகிழ்ச்சி தருகிற கொலு கொண்டாட்டங்களை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். இந்தஆண்டும் நம் வீடுகளில் வைக்கப்படும் கொலு கண்காட்சியை படம் எடுத்து அனுப்ப வேண்டும். சிறந்த படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. உங்கள் வீடுகளில் வைத்த கொலு படங்களை அனுப்பும்போது … Read more