டெல்டாவில் விடிய விடிய கனமழை 11,500 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது: மின்னல் தாக்கி தந்தை, மகன் பலி

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழையால் அறுவடைக்கு தயாரான 11,500 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்கு இந்த ஆண்டு மே மாதத்திலேயே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் மும்முரமாக செய்தனர். இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 72 ஆயிரத்து 816 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்  இன்னும் … Read more

கோவை | பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான இருவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு – காவல் ஆணையர் தகவல்

கோவை: கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார். கோவை குனியமுத்தூரில் உள்ள முத்துசாமி சேர்வை வீதியைச் சேர்ந்தவர் தியாகு(35). இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர். கடந்த 23-ம் தேதி இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மர்மநபர்கள் தீ வைத்தனர். இதில் கார் எரிந்து சேதமடைந்தது. அதேபோல், குனியமுத்தூரில் உள்ள ஞானபுரத்தை அடுத்த சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் … Read more

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவம், வாள் கண்டெடுப்பு

செய்துங்கநல்லூர்: ஆதிச்சநல்லூரில் வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவங்கள், மீன் தூண்டில், முள், வாள், கத்தி கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அகழாய்வு பணியில் இதுவரை 85க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம், சங்க கால வாழ்விடப்பகுதிகள் என ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் … Read more

மதுரை விமான நிலையத்திற்கு தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீரா? – கவுன்சிலர்கள் எதிர்ப்பால் அமளி

மதுரை: பெரியார் குடிநீர் திட்டத்தில் மதுரை விமான நிலையத்திற்கு தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்வதற்கு மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், “எரியாத 55 ஆயிரம் தெரு விளக்குகள் பழுதுப்பார்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தெருவிளக்குகள் … Read more

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் மைதானமாக உள்ளது: தவறான தகவல் மீது நடவடிக்கை கோரி எஸ்பியிடம் மனு

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் மைதானமாக இருப்பதால் தவறான தகவல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்பிக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் வந்த பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கைகள், 250 ஐசியூ படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை கட்டுமானப் பூர்வாங்கப் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளதாக கூறியிருந்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் துவங்காத நிலையில் நட்டாவின் அறிவிப்பு தென்மாவட்ட மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. … Read more

சொன்ன வாக்கை காப்பாற்றிய தேனிக்காரர்.. பாரதிராஜாவை வாழ்த்திய கமல்ஹாசன்…!

சொன்ன வாக்கை காப்பாற்றிய தேனிக்காரர்.. பாரதிராஜாவை வாழ்த்திய கமல்ஹாசன்…! Source link

முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத் திறனின்மையை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களே காட்டுகின்றன: இபிஎஸ்

சென்னை: “எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாசாரம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. தனி மனிதரின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஆளும் திமுகவினர் உருவாக்கி வருகின்றனர். இது, அமைதியான தமிழகத்திற்கு மிகவும் ஆபத்தான போக்காகும்” என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது; சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழகக் காவல் துறை சட்டப்படி, … Read more

பக்தர்களிடம் செல்போன் திருட முயன்றவர் சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தற்கொலை

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் ஓரியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (41). இவர், நேற்று காலை 6 மணியளவில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களிடம் செல்போன் திருட முயன்றதாக கோயில் காவலாளிகள் பாலாஜி, குரு ஆகியோர் பிடித்து சமயபுரம் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது செல்போன் திருட முயன்றதாக வழக்கு பதிந்து லாக்கப்பில் வைத்திருந்தனர். இந்நிலையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட முருகானந்தம், கழிவறைக்கு செல்ல வேண்டும் … Read more

மதுரை | கீழடியைப்போல் கரடிப்பட்டி மலையடிவாரத்திலும் தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிப்பு

மதுரை: கீழடியைப்போல் மதுரை மாவட்டத்தில் கரடிப்பட்டி மலையடிவாரத்திலும் தொல்லியல் எச்சங்கள் கிடைத்துள்ளன. இதில் பழங்கால இரும்பு உருக்கு ஆலை இருந்ததற்கான தடயம் கிடைத்துள்ளன. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வடபழஞ்சி கிராமம் அருகிலுள்ள கரடிப்பட்டி மலையடிவாரத்தில் பழங்கால இரும்பு உருக்கு ஆலை இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வடபழஞ்சியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் மதன்குமார், சுதர்சன் ஆகியோர் அளித்த தகவலின்படி, மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் அதன் வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் களஆய்வு … Read more

சந்தி சிரிக்கும் சட்டம் – ஒழுங்கு; திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

சட்டம் – ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்துள்ள அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகும். இதற்கு உதாரணமாக, 1990 ஆம் ஆண்டு சென்னையில் பட்டப்பகலில் பத்மனாபா மற்றும் 13 பேர் கொலை செய்யப்பட்டது; 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு; 2006 ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு … Read more