இளைஞர் உயிரைப்பறித்த சிக்கன் பிரியாணி… கர்ப்பிணிக்கு விருந்து நிகழ்வில் சோகம்

திருவாரூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்தார்.  திருவாரூர் மாவட்டம் மெயின் ரோடு திருவாசல்பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் மாரியம்மாளுக்கு மருந்து கொடுக்கும் நிகழ்வு விக்னேஷ் இல்லத்தில் நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது தக்காளிசாதம், தயிர் சாதம், புளி சாதம், பிரிஞ்சி சாதம், கருவேப்பிலை சாதம் … Read more

திருவாரூர் அருகே உணவு சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உள்பட 8 பேர் மருத்துவமனையில் அனுமதி: ஒருவர் பலி

திருவாரூர்: திருவாரூர் அருகே உணவு சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உட்பட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருவாசல், மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (29) ,.இவரது மனைவி மாரியம்மாள் ( 26). மாரியம்மாள் 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் இவருக்கு ஐந்தாவது மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி விக்னேஷ் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. அதில் 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். இதில், தக்காளி சாதம், … Read more

அரசியல்ரீதியாக ‘ஒன் சைட் கேம்’ ஆடுகிறது எய்ம்சுக்கு சுற்றுச்சுவர்கூட இல்லை திட்டங்களுக்கு நிதி குறைப்பு: ஒன்றிய அரசு மீது நிதியமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு

மதுரை: ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன் தான் அனைத்தையும் செய்கிறது. மக்கள் நலனுக்காக எதையும் செய்யவில்லை என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட சுந்தரராஜபுரம் பகுதியில் புதிய ரேஷன் கடையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் நேரங்களில் அளிக்கப்படும் வாக்குறுதிகளான இலவசங்கள் எந்த வகையில் வழங்கப்படுகிறது. அதற்கான நிதி போன்றவை குறித்து தெளிவான விளக்கங்களுடன் … Read more

"அவதூறுகளில் இருந்து நித்யானந்தா வெளியே வருவார்"- பாஜகவின் திருச்சி சூர்யா சிவா

அரசியல் சார்ந்த பொய்யான குற்றச்சாட்டுகளில் இருந்து சுவாமி நித்யானந்தா வெளியே வருவார் என்றும், பிரபலமானவர் என்பதால் பொய்யான புகார்கள் எழுவது சாதாரண விஷயம் தான் என்றும் திருச்சி சூர்யா சிவா கூறியுள்ளார். நித்தியானந்தா ஆசிரமம் சார்பில் கைலாச விருதுகள் என்ற பெயரில் விஜயதசமி தினமான நேற்று விருது வழங்கும் நிகழ்ச்சி சமூக வலைதளம் மூலம் ஆன்லைனில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு விருது வழங்கி உள்ளனர். அதில் திமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் திருச்சி சிவாவின் … Read more

அங்கன்வாடி மையங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்துகொள்ளலாம்

2022-23-ஆம் கல்வியாண்டு முதல் ஊராட்சி பள்ளிகள், தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2, 381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு அங்கன்வாடி மையத்தில் ஒரு ஆசிரியர் வீதம் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 2,381 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இல்லம் தேடிக் கல்வித்’ திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக … Read more

கஞ்சா பதுக்கி வைத்திருந்த கூட்டுறவு சங்க தலைவர் கைது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் கூட்டுறவு சங்க தலைவர் கைது செய்யப்பட்டார். கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் கருப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக உள்ளார். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் சோழவந்தான் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கருப்பட்டி பகுதியில்.சோழவந்தான் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செல்வகுமார் 800 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டு விசாரணை நடத்தியதில் அவர் … Read more

திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வேட்புமனு

சென்னை: திமுக தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். திமுகவின் 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகர செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிந்து, இதில் தேர்வானவர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழு கூட்டம் வரும் 9-ம் தேதி … Read more