அரசு அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரப்பதிவு செய்யும் பதிவாளர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: அரசு அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரப்பதிவு செய்யும் பதிவாளர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்திருந்தால் அதன் விவரங்களை தாக்கல் செய்ய பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.

Tamil news today live : தமிழகத்தில் 3 நாட்களுக்கு 23 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Tamil news today live : தமிழகத்தில் 3 நாட்களுக்கு 23 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை Source link

23 மாவட்டங்கள்.. 3 நாட்கள்.. வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்..!

தமிழகத்தின் 23 மாவட்டங்களில், இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று (செப்.26-ம் தேதி) முதல் 29-ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. … Read more

சுற்றுலா துறை பணிகளில் மத்திய அரசு அனுமதி கிடைப்பதில் தாமதம்: புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: சுற்றுலாவுக்கு 2 ஆயிரம் அறைகள் தேவை. ஆனால், அனுமதி உடனடியாக கிடைப்பதில்லை. இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து கோப்பு அனுப்பினால் அனுமதி கிடைக்குமா என்ற நிலையுள்ளதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விமர்சித்துள்ளார். புதுவை அரசின் சுற்றுலாத் துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ‘சுற்றுலா ஒரு மறு சிந்தனை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடத்தப்பட்டது. கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த கருத்தரங்கை முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். … Read more

பெரியாரும், அண்ணாவும் கற்றுத் தந்த சமத்துவ உணர்ச்சி இது தானா? – திமுகவுக்கு சீமான் கேள்வி

மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பது தான் சமூக நீதியா? என, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ஆதித்தொல்குடியான குறவர் சமூக மக்களின் உரிமைகளுக்காக ஆறு நாட்களாகப் பட்டினிப்போராட்டம் நடத்திய வனவேங்கைகள் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி இரணியன் அவர்கள், தங்களது கோரிக்கைகள் குறித்தான மனுவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களிடம் அளிக்கச் … Read more

'தெலுங்கு பட அமைச்சர்கள்' – திமுக அமைச்சர்களை கலாய்த்த ஜெயக்குமார்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள்,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,மற்றும் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி  இன்று (செப். 26) ஆலோசனை நடத்தினார். அதே போல், கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,”சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட செயலாளர்களுடன் எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். … Read more

மகாளய அமாவாசை அம்மாமண்டபம் காவிரி படித்துறையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு-அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர்

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.அமாவாசை நாட்களில் பக்தர்கள் விரதமிருந்து நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம். மாதம் ஒரு அமாவாசை வந்தாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. இதில் முக்கியமானது புரட்டாசி மகாளய அமாவாசையாகும். முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த காலமாக, மகாளய … Read more

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நளினி, ரவிச்சந்திரன் கோரிக்கை மனு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து குற்றவாளிகள் நளினி, ரவிச்சந்திரன் இருவரையும் விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகளான 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் கடந்த மே மாதம் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் தன்னுடைய சட்டப்பிரிவு 142 சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டார். இவ்விடுதலையைத் தொடர்ந்து இவ்வழக்கில் குற்றவாளிகள் நளினி உள்ளிட்ட மற்ற 6 பேரும் … Read more

#பதற்றம் : ஆரணி- வேலூர் சாலையில் காலாண்டு தேர்வை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்.! குவிக்கப்பட்ட போலிசார்.! 

திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் காலாண்டு தேர்வை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 20 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் படித்து வந்த பிரபாகர் என்ற மாணவர் ஆசிரியர் தாக்கி விட்டதாக அளித்த புகாரின் பேரில் நான்கு நாட்களுக்கு முன் இரண்டு ஆசிரியர்களை பணியிடை … Read more

சோகம்.. பிரபல தமிழ் இயக்குநர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

தமிழ்த் திரைப்பட் இயக்குநரும், வானொலி விளம்பரங்கள் மூலம் புகழ் பெற்றவருமான எஸ்.வி.ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். 1930 முதல் 1940 வரையிலான காலகட்டங்களில் தமிழ்த் திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் கே.சுப்ரமணியன். இவருடைய மகன் எஸ்.வி.ரமணன். இவர், நாடகக் கலைஞராக தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சில நாடகங்களையும், ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார். அத்துடன், அகில இந்திய வானொலியில் விளம்பரங்களுக்கு குரல் கொடுத்ததன் மூலம் கூடுதல் கவனம் பெற்றார். ரத்னா ஃபேன் ஹவுஸ் … Read more