தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடிய போதை ஆசாமி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா தீயணைப்பு நிலைய அதிகாரி முனீஸ்குமாருக்கு கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா பாலவிடுதி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கிணற்றில் விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது மனைவி புகார் அளித்து இருந்தார். உடலை மீட்டு தரம்படி கேட்டு மனைவி கொடுத்த புகாரில் பேரில் காலை 11:30 மணிக்கு சென்று கிணற்றுக்குள் இறங்கிய வீரர்கள் ஒரு பக்கம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மறுபக்கம் நவீன கேமராவை கிணற்றுக்குள் இறக்கி உடல் எங்கு … Read more

திருச்சுழி அருகே சேதமடைந்துள்ள சுகாதார நிலையத்தை சீரமைக்க கோரிக்கை

திருச்சுழி: திருச்சுழி அருகே சேதமடைந்த நிலையில் உள்ள சுகாதார நிலையத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி அருகே உள்ள காளையார்கரிசல்குளம் (மேற்கு) ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஒரு சில வீடுகளில் மட்டுமே கழிவறை உள்ளது. பெரும்பாலான மக்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர். காளையார் கரிசல்குளம் மேற்கு ஊராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுகாதார வளாகம் தற்போது மிகவும் சேதமடைந்து  இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த … Read more

"நிலுவைத்தொகை செலுத்தியாச்சு; மத்திய அரசின் செயல் ஏற்புடையதல்ல" – அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசுத் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பாலாஜி தனது ட்விட்டர் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். மின்சாரப் பரிமாற்றத்திற்கான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷனின் ( POSOCO- Power System Operation Corporation) தலைவர் எஸ்.ஆர். நரசிம்மன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்றக் கட்டணமாக 5 ஆயிரத்து 100 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டு இருந்தது. பில் (BILL) … Read more

‘கங்குலியின் விலா எலும்பை குறி வைத்து தாக்க சொன்னார்கள்’ – உண்மையை உடைத்த அக்தர்

Shoaib Akhtar Tamil News: 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரின் கடைசி பதிப்பு ஒரு நாள் போட்டியாக நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை டி20 வடிவத்தில் இடம்பெற உள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது. ஆசியக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டமாக இந்தியா – … Read more

கேரளாவிற்கு அனுப்பப்பட்ட பாலில் ‘யூரியா’ கலப்படம்.. 12,750 லிட்டர் பால் பறிமுதல்..!

திண்டுக்கலில் இருந்து கேரளா சென்ற தனியாருக்கு சொந்தமான அகிலா ட்ரான்ஸ்போர்ட டேங்கர் லாரியில் இருந்த பாலை மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் அம்மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதில் யூரியா கலக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள். அந்த லாரியில் இருந்த யூரியா கலந்த 12,750 லிட்டர் பால் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். நுரைபொங்குவது போல் காட்சியளிக்க பாலில் யூரியா கலக்கப்படுவதாக தெரிவித்த அதிகாரிகள் சோதனையைத் தீவிரப்படுத்தப்போவதாக எச்சரித்துள்ளனர். Source link

வல்லம் குவாரி சாலையை ‘தமிழ் வழிச் சாலை’ என பெயர் மாற்ற முடிவு: தஞ்சையில் தீவிரமாகும் ஸ்மார்ட் சிட்டி பணிகள்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள வல்லம் குவாரி சாலையை ‘தமிழ் வழிச்சாலை’யாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, ரூ.10 கோடியில் அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூரில் குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முதல் புதிய பேருந்துநிலையம் வரை உள்ள வல்லம் குவாரி சாலை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு வருகிறது. 40 அடி அகலம் கொண்ட இந்த சாலையில் இருபுறமும் பேவர் பிளாக்குகள் பதிக்கப்பட்ட நடைபாதை, சோலார் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றுடன், … Read more

அடாவடி கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்..! – அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன..?

எளிய மக்களின் இன்றியமையாத பயண வாகனமாக திகழ்வது பேருந்துகள். அந்த பேருந்து கட்டணம் நடுத்தர மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு உயர்ந்தால் மக்களின் நிலை என்னாவாகும்? இந்நிலையில் சில ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்து பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம்11 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவித்த 97 பேரிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணம்ரூ.68,800 அவர்களிடமே திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ஆம்னி … Read more

பவானிசாகர் அணைக்கு 68-வது பிறந்தநாள் – நீருக்கு அடியில் புதைந்து கிடக்கும் வரலாறு !!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண்னணை(மண் அணை) ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை போன்ற பல பெருமைகளுக்கு சொந்தமான அணை இது.  சுமார் 10கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நாடு விடுதலை அடைந்த பின்னர் 1948 ஆம் ஆண்டு துவங்கி ஏழு ஆண்டு தொடர்ச்சியான கட்டுமான பணிகளுக்கு சந்தித்தது. பின்னர் அணை கட்டி முடிக்கப்பட்டு 1955 … Read more

மதுரை திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவமனைக்கு ரூ.60 கோடியில் புதிய கட்டிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 1975ம் ஆண்டு கீழ்பாக்கத்தில் அரசு ஹோமியோபதி கல்லூரி துவங்கப்பட்டது. பின்னர் 1982ம் ஆண்டு மதுரை திருமங்கலத்தில் மூன்றறை ஆண்டு டிப்ளமோ வகுப்பு துவங்கப்பட்டது. அதன்பிறகு 1985ம் ஆண்டு டிப்ளமோ வகுப்பு பட்டப்படிப்பாக தரம் உயர்த்தப்பட்டது. ஆண்டுதோறும் இந்த கல்லூரியில் 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. தற்போது 300 … Read more

வாய்க்காலில் சடலமாக மிதந்து வந்த 6 வயது சிறுவன்! போலீஸ் விசாரணை

வாய்க்காலில் சடலமாக மிதந்து வந்த 6 வயது சிறுவனை மீட்டு காவல் ஆய்வாளர் முதலுதவி செய்து காப்பாற்ற முயன்ற நிலையில் சிறுவன் ஏற்கெனவே இறந்து வந்தது தெரிய வந்துள்ளது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள உக்கரம் குப்பன் துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் நீரில் சிறுவன் ஒருவன் மிதந்து வருவதாக கடத்தூர் காவல்துறையினருக்கு அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் … Read more