திருப்பத்தூரில் மின்துறை அதிகாரிகள் அலட்சியம் : காலைக் கடனைக் கழிக்கச் சென்றவர் பலி

திருப்பத்தூர் மாவட்டம் சின்னபசலிக்குட்டை பகுதியில் வசித்து வந்தவர் சின்னகண்ணு (வயது 55). இவர் அதிகாலை 4 மணி அளவில் தன்னுடைய வீட்டின் அருகாமையில் உள்ள கழிவறைக்கு காலைக்கடன் கழிக்க சென்றுள்ளார்.  இந்நிலையில் கழிவறையின் அருகாமையில் உயர்மின் அழுத்தம் உள்ள மின்சார கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்துள்ளது. இதனை சற்றும் கவனிக்காத சின்னக்கண்ணு, ஏதோ தொங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து அதை அப்புறப்படுத்த கையை வைக்கும் போது, மின்சாரம் தாக்கி கம்பியைப் பிடித்தவாரே சம்பவ இடத்திலேயே பலியானார்.  இதனை … Read more

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிக்சை: பெண்ணுக்கு இழப்பீடு தர ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிக்சை செய்தும் கருவுற்றதால் பெண்ணுக்கு இழப்பீடு தர ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த வள்ளி என்பவர், குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்த பிறகும் கருவுற்று குழந்தை பிறந்துள்ளதால் இழப்பீடு தர உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சென்னை தினத்தை கொண்டாட மாநகராட்சி அசத்தல் திட்டம்… கலந்துகொள்ள நீங்கள் ரெடியா?

சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை சாலையில் ஆகஸ்ட் 20 மற்றும் 21ஆகிய நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னைப் பட்டனம் 153-ம் ஆண்டு முதல் தற்போது வரை 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1539-ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் நாள் … Read more

ஃபார்முக்கு வந்த தீபக் சாஹர்… ஸ்விங் பந்தில் வித்தை காட்டி அசத்தல்!

Deepak Chahar Tamil News: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், அந்நாட்டு நேரப்படி காலை 9.15 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டதுடன் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கே.எல்.ராகுல், ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்யுமாறு அழைப்பு விடுத்தார். முதலில் பந்துவீசுவது இந்திய அணிக்கு சில நன்மைகளை கொடுக்கும். குறிப்பாக தீபக் சாஹர் போன்ற பந்துவீச்சாளர்கள் பந்துகளை ஸ்விங் செய்வதற்கு எதுவாக இருக்கும். அத்தகைய தரமான பந்துவீச்சு தாக்குதலை அரிதாக எதிர்கொள்ளும் … Read more

தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களுக்க மின்சாரம் வாங்க, விற்க தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

மின் பகிர்மான நிறுவனங்கள் ரூ.5100 கோடி பாக்கி நிலுவை தொகையை செலுத்த தவறியதால் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பிகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க விற்க நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின் பகிர்மான நிறுவனங்கள் 5100 கோடி பாக்கி நிலுவைத் தொகையை செலுத்த தவறியுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநிலங்களுக்கிடையான மின் பகிர்வில் மத்திய … Read more

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் கொள்முதல், விற்க தடை.!

மின்பகிர்மான நிறுவனங்கள் 5 ஆயிரத்து 85 கோடி ரூபாய் பாக்கித் தொகையை செலுத்த தவறியதால், தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்ற மையத்திடம் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பில் தயாரிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் வரை தொகையை செலுத்த அவகாசம் அளிக்கப்படும் நிலையில், அதைக் கடந்தும் செலுத்தாத காரணத்தால் 13 மாநிலங்களில் உள்ள 27 மின்பகிர்மான நிறுவனங்கள், மின்சாரம் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு முதல்முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. … Read more

பெண்களை முறைத்துப் பார்க்கும் ஆண்களை பேருந்தில் இருந்து இறக்கி விடலாம்: காவல் நிலையத்தில் புகார் அளிக்க நடத்துநருக்கு அனுமதி

சென்னை: பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிடவும், அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் நடத்துநர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து வாகனத்தில் பின்பற்றக்கூடிய வகையில் மோட்டார் வாகன விதிகளில் சேர்ப்பதற்காக சில வரைவு திருத்தங்கள் உருவாக்கப்பட்டு, அதுதொடர்பாக கருத்து கேட்கப்பட்ட நிலையில், விதிகளை திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறைசெயலர் பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணை: பேருந்தில் பயணிக்கும் பெண்களை ஆண் பயணி முறைத்துப் பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், … Read more

மக்களே 16 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (19.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்கள் மற்றும் … Read more

ஆனைகட்டியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணி 3-வது நாளாக நீடிப்பு

கோவை: கோவை ஆனைகட்டி வனப்பகுதியில் தொடர்ந்து 3-வது நாளாக உடல்நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணியில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் சரகம், ஆனைகட்டி வடக்கு பீட், சீங்குளி பழங்குடியின கிராமம் அருகே, கொடுந்துறைப்பள்ளம் ஆற்றங்கரையில் இரு மாநிலங்களுக்கு இடையான எல்லைப்பகுதியில் ஆண் யானை ஒன்று கடந்த 15-ம் தேதி தென்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், யானையின் உடல் நலம் குறித்து கண்காணிக்க துவங்கினர். யானை உடல் மெலிந்து காணப்பட்டது. இதையடுத்து அதற்கு … Read more

ரயிலில் இருந்து இறங்கும் போது தண்டவாளத்தில் விழுந்த காவலர்.. உடல் சிதறி பரிதாப பலி..!

ரயிலில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த காவலர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம்,  ஈட்டியம்பட்டியை சேர்ந்தவர் வேலு. இவர் சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். சம்பவதன்று, சென்னையில் இருந்து கோவை செல்லும் ரயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது மொரப்பூர் ரயில் நிலையம் அருகே வண்டி மெதுவாக செல்லும் போது இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்  தண்டவாளத்தில் விழுந்தார். இதில், ரயில் அவர் மீது ஏறி பரிதாபமாக பலியானார். தகவலறிந்து … Read more