மத பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை… இது இந்துக்கள் வாழும் இடம்… சர்ச்சை பேனர்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே இந்துக்கள் வாழும் பகுதி மதப்பிரச்சாரம் செய்யவும், மதக் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை என வைக்கப்பட்டுள்ள பேனர் சமூக வலைதளங்களில் பரவி தற்போது பெரும் பேசுபொருளாகி வருவதால் பொதுமக்கள் முகம் சுளித்து வருகின்றனர். கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து கருமத்தம்பட்டி செல்லும் சாலையில் காடுவெட்டி பாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் சர்ச்சையினை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகை தான் … Read more

முன்விரோதம் காரணமாக முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக் கொலை – 9 பேர் கைது..!

மயிலாடுதுறையில் ஹோட்டலில் சாப்பிட்ட போது நிகழ்ந்த தகராறால், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொத்ததெருவைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் குண்டர் சட்டத்தில் கைதாகி கடந்த 15 நாட்களுக்கு முன் வெளியில் வந்த நிலையில், நேற்றிரவு நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். புதிய பேருந்து நிலையம் அருகே மூவரையும் வழிமறித்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். அப்போது உடனிருந்த நண்பர்கள் தப்பியோடிய நிலையில், கண்ணனை … Read more

“மின் கட்டண உயர்வால் தமிழகத்தை விட்டு தொழிற்சாலைகள் வெளியேறும்” – மதுரை கருத்து கேட்புக் கூட்டத்தில் ஒலித்த குரல்

மதுரை; மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழிற்சாலைகள் தமிழகத்தை விட்டு வெளியேறி மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயரும் சூழல் ஏற்படும் என்று மதுரையில் தொழிற்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மின் கட்டணம், மின் இணைப்பு பெறுவது உள்ளிட்ட பல்வேறு மின் சேவைகளுக்கான கட்டணம் உயர்த்த அனுமதி கோரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம், மாநில மின் சுமைப்பகுப்பு மையம் ஆகியவை தமிழ்நாடு … Read more

இப்படி பேசக் கூடாது: சீமான் ஆவேசம்… பிடிஆர் பதிலடி!

அரசியல் கட்சிகள் இலவசங்கள் கொடுப்பது பற்றி இந்தியா முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில், ஹரியானா மாநிலம் பானிபட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தன்னிறைவு பெறுவதற்கு தடையாக இருக்கும் என்றும் வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார். கெஜ்ரிவாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார். இதுஒருபுறமிருக்க பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் அரசியல் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

சென்னை: அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் 17 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த ஆணையம் முதல்வரிடம் 3000 பக்கம் கொண்ட ஐந்து பாகங்கள் அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் காவல் துறையினர் மீது நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைத்துள்ளனர். அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், தூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரன், டிஎஸ்பி லிங்க திருமாறன், 3 இன்ஸ்பெக்டர், … Read more

கள்ளக்குறிச்சி அருகே மாணவி உயிரிழப்பு தொடர்பாக மேலும் 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். வீடியோ ஆதாரம் அடிப்படையில் ரஞ்சித், கோமதுரை, ஆகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது.

பரமக்குடி: பள்ளி முன்பு விளையாடிய மாணவர் மின்னல் தாக்கியதால் பரிதாப உயிரிழப்பு!

மின்னல் தாக்கிய நிலையில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பரமக்குடி அருகே நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார் கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் தாழையடி கோட்டை பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் கஜினி பள்ளிக்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அரசுப் பள்ளியில் பணியாற்றும் … Read more

கோவை, திருப்பூர் முன்மாதிரியாக திகழ்கின்றன: கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பாராட்டு

கோவையில் பிரபலமான சுகுணா குழுமத்தின் நிறுவனர் ஜி ராமசாமி நாயுடுவின் நூற்றாண்டு விழா காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் குழுமத்தின் நிறுவனர் ராமசாமியின் திருஉருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. ராமசாமி நாயுடு உருவ சிலை திறப்பு கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் சிறப்புரையில் பசவராஜ் பொம்மை, இளமை காலத்தில் கோவையில் அவரது நினைவுகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். மேலும் G. ராமசாமி நாயுடு … Read more

இருசக்கர வாகன விபத்தில் வாலிபர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் மணிகண்டன் (22). இவர் நேற்று இரவு நாமகிரிப்பேட்டையில் இருந்து இருசக்கர வாகனத்தில் ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது நாமகிரிப்பேட்டை ராசிபுரம் சாலையில் மெக்கானிக் பட்டறை அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே … Read more

மகன்களை தனியாக விட்டு நடிகையின் கையை பிடித்து தப்பி ஓடிய நடிகர் தனுஷ்..!

சென்னை கோயம்பேடு திரையரங்கிற்கு தனது புதிய படத்தின் முதல் காட்சியை பார்க்கச்சென்ற நடிகர் தனுஷ், உடன்அழைத்துச்சென்ற மகன்களை தனியாக அனுப்பி விட்டு, படத்தின் நாயகி ராஷி கண்ணாவின் கையை பிடித்துக் கொண்டு திரையரங்கில் இருந்து வெளியே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டார். திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக நடிகர் தனுஷ், தனது மகன்கள் மற்றும் படத்தின் நாயகி ராஷி கண்ணா உள்ளிட்டோருடன் கோயம் பேடு ரோகினி திரையரங்கிற்கு வந்திருந்தார். ரசிகர்கள் தனது படத்தை எப்படி … Read more