சென்னை அருகே நரிக்குறவ மக்களை அப்புறப்படுத்த கடும் எதிர்ப்பு.!

திருவள்ளூர் மாவட்டத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் பொன்னேரி வருவாய் கோட்ட பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவின் படி இவர்களுக்கு கடந்த 1 வாரமாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் குன்னம் சேரி ஆரணி ஆற்றின் கரையோரத்தில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களில் 200க்கும் மேற்பட்டோர் கடந்த 20 வருடமாக வசித்து வருகின்றனர். இவர்களை பொதுப் பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் … Read more

திண்டுக்கலில் 200 ஏக்கரில் மூலிகைப் பயிர் சாகுபடி: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: திண்டுக்கலில் 200 ஏக்கரில் மூலிகைப் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தலைமை அலுவலகம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை புதிய வெளி நோயாளர் பிரிவு கட்டிடத்தை மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் … Read more

தீ குளித்த 17 வயது காதலி… மரண வாக்குமூலத்தில் வெளியான திடுக்கிடும் காரணம்

தர்மபுரி அருகே அக்கமனஅள்ளி பகுதியில் உள்ள சின்னமாட்டுகடை கிராமத்தை சேர்ந்த முனியாண்டி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மகள் பவித்ரா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இவர் சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த ஆண்டு  12ம் வகுப்பு முடித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத பொழுது உடலில் மண்ணென்ணை ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். பிறகு அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டார் வநந்து பார்த்துள்ளனர். அப்போது பவித்ரா தீக்காயங்களுடன் கிடந்துள்ளார்.  பின்னர் பக்கத்துவீட்டார் … Read more

4 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர்கள் தங்கமணியும், வேலுமணியும் தான் – புகழேந்தி குற்றச்சாட்டு

நாமக்கல்: கடந்த நான்கு ஆண்டும் தங்கமணியும், வேலுமணியும் தான் முதல்வராக செயல்பட்டனர் என புகழேந்தி விமர்சனம் செய்துள்ளார். திருச்செங்கோட்டில் அதிமுக ஓபிஎஸ் அணி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஓபிஎஸ் பிரிவு அதிமுக நாமக்கல் மாவட்ட செயலாளர் எம்.பி.ஜெயமுருகேசன் தலைமை வகித்தார். நிர்வாகி வா. புகழேந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் விளையாடுவதற்காக ஒரு பொம்மையாக பயன்படுத்தப்பட்டவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. நான்கு ஆண்டு முதலமைச்சர் … Read more

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி, ஜெஜெநகர், ஆண்டிப்பாளைம், தட்டான் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் குலதெய்வ கோயிலில் தட்டான் தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது.  இக்கோயிலில் ஆடி மாத திருவிழா, நேற்று காலை முகூர்த்தக் கால் நடுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சக்தி கரகரம் அழைத்து வரப்பட்டது. பின்னர் இரவு ஏழு மணி அளவில் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் பூசாரி முனுசாமி காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தலையின் … Read more

“எனது மனதில் இருந்ததை அவரிடம் கொட்டினேன்” – நள்ளிரவில் அமைச்சரை சந்தித்தது குறித்து சரவணன்

மதுரை: ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்துவதில் எழுந்த பிரச்சனை தொடர்பாக நள்ளிரவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் மன்னிப்பு கேட்டுள்ளார். காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதில், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணனுக்கும் விமான நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாஜகவினர் … Read more

சாஃப்ட், சர்வாதிகாரி என வசனம் பேசுவதை நிறுத்துங்கள் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி விளாசல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், காவல் துறை உயர் அதிகாரிகளிடமும் திமுக அரசின் முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தன. இதற்கு முன்னாள் இப்படிப்பட்ட ஆலோசனைகள் எல்லாம் நடத்தாமல்தான் காவல் துறைத் தலைவர் ஆப்பரேஷன் கஞ்சா 2.0 என்று அறிவித்தாரா? இந்த அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன? காவல் துறைத் தலைவரின் இந்த அறிவிப்பு வெத்துவேட்டு ஆனதால்தான், இந்த முதலமைச்சர் … Read more

கல்விக்கும், மருத்துவத்துக்குமான நலத்திட்டங்கள் இலவசமா? – தமிழக முதலமைச்சர் விளக்கம்

கல்விக்கும், மருத்துவத்துக்குமான நலத்திட்டங்கள் இலவசத்தின் கீழ் வராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய முதலமைச்சர், சுகாதார மையத்திற்கும் மழைநீர் வடிகால் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். கொளத்தூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி அழகுபடுத்தும் பணிக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அரசுப் பள்ளி ஒன்றில் டென்னிஸ் மைதானத்தையும் திறந்து வைத்து பேசிய முதலமைச்சர், இலவசங்கள் கூடாது என்று கூறுவது பற்றி கவலையில்லை என்றார். “இலவசம் வேறு.. … Read more

நிதி அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: பாஜகவை கண்டித்து திமுகவினரின் ரயில் மறியலால் மதுரையில் பரபரப்பு 

மதுரை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசியதை கண்டித்து மதுரையில் திமுகவினர் ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடல் மதுரைக்கு இன்று (ஆக.13) கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழத அரசு சார்பில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் … Read more