மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றம் – வெள்ளக்காடாக காட்சியளிக்கும் ஒகேனக்கல்

தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளதால் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலம் அருகே உள்ள புது பாலத்தை பயன்படுத்த தடைவிதித்து சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களும், இளைஞர்களும் செல்பி எடுப்பதை தடுக்க முடியாததால் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சேலம் மாவட்டம் பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடு, தோட்டங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே விளாங்குடி கொள்ளிடம் … Read more

என் பெற்றோரால் என்னை படிக்க வைக்க முடியவில்லை : நடிகை சமந்தா

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முக்கிய கேரக்டரின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா ரூத் பிரபு தொடர்ந்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில்’ நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்து தனி நாயகியாக உருவெடுத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துன்னார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தன்னை ஒரு தனி நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டுள்ள சமந்தா தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை குவித்துள்ளார். ஆனால் அவரின் வெற்றி சாதாரணமாக … Read more

தமிழகம் | விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் டிராக்டர்கள் வழங்கும் திட்டம்.!

தமிழகம் முழுவதும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் டிராக்டர்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.  முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (4.8.2022) தலைமைச் செயலகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையால் 22 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள் மற்றும் 185 கொத்துக் கலப்பைகள் ஆகியவற்றை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் அடையாளமாக, ரோட்டவேட்டர்கள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் மற்றும் கொத்துகலப்பைகள் பொருத்தப்பட்ட 25 … Read more

தேசியக் கொடி: முதல்வர் ஸ்டாலினின் சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படம் மாற்றம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார். பிரதமர் மோடி தேசிய கொடி படத்தை வைக்க அழைப்பு விடுத்திருந்த நிலையில் முதல்வர் வைத்துள்ள புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் ‘சுதந்திர தின அமுதப் பெருவிழா’ (அம்ரித் மஹோத்சவ்) என்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினவிழா அன்று அனைவர் … Read more

’’என்னையா வீடியோ எடுக்கறீங்க!’’ – ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானை.. தெறிச்சு ஓடிய இளைஞர்கள்

கூடலூர் அருகே தன் முன்பு நின்று வீடியோ எடுத்த இளைஞர்களை ஆக்ரோஷமாக காட்டு யானை ஒன்று துரத்தியடித்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை பகுதியில் மக்னா யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் தஞ்சமடையும் அந்த யானை இரவு நேரம் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இரவு முழுவதும் ஊருக்குள் சுற்றி விட்டு அதிகாலை நேரங்களில் சாலையிலேயே நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. … Read more

அரசு பஸ் மீது பாறாங்கல்லை தூக்கிப் போட்டு உடைத்த ஆசாமி: வீடியோ

ரகுமான், கோவை நீலகிரியில் மதுபோதையில் அரசு பேருந்தின் முகப்பு கண்ணாடியை உடைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் இருந்து குன்னூர் செல்லக்கூடிய பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்றுகொண்டிருக்கும் பேருந்தின் முகப்பு கண்ணாடியை ஒருவர் பெரிய கல்லை தூக்கிபோட்டு உடைத்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக கோத்தகிரி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபரை காவல்நிலையம் … Read more

#தர்மபுரி || லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டத்தில் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்து உள்ளார். தர்மபுரி மாவட்டம் கக்கஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி முருகேசன் (52). இவர் இன்று காலை தடங்கம் அருகே சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக திடீரென முருகேசன் மீது மோதியது. இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை காவல்துறையினர், உயிரிழந்த முருகேசனின் … Read more

சென்னையில் குட்டையுடனான மழைநீர் சேகரிப்பு வசதியுடன் விரைவில் ‘ஸ்பாஞ்ச்’ பூங்காக்கள் – என்ன ஸ்பெஷல்?

சென்னை: குட்டையுடன் சேர்ந்த மழைநீர் சேகரிப்பு வசதிகளுடன் “ஸ்பாஞ்ச்” பூங்காக்களை சென்னை மாநகராட்சி விரைவில் அமைக்கவுள்ளது. இதன் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம். சென்னையில் புதிதாக சோழிங்கநல்லுார், அம்பத்துார், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் போதிய நகர கட்டமைப்பு இல்லாத நிலை உள்ளது. இந்தப் பகுதிகளில் இணைக்கப்பட்ட பகுதிகளில் போதியளவில் விளையாட்டு அரங்கம், பூங்காக்கள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பவில்லை. அதேநேரம், மாநகராட்சிக்கு சொந்தமான திறந்தவெளி காலி இடங்கள் அதிகளவில் உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு அவற்றில் புது முயற்சியாக … Read more

’இதை மட்டும் செய்யுங்களேன்!’.. சுற்றுலா பயணிகளை கவரும் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள்!

முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் லகூன் பகுதியை சுற்றுலாத் தலமாக  மேம்படுத்த  சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய பரப்பளவு கொண்ட அலையாத்திக் காடுகள் உள்ளன. இருபுறமும் மரம் சூழ்ந்த ஆற்றின் குறுக்கே படகில் நெடுதூரப் பயணம் மனதை சொக்க வைக்கும். இருபுறமும் அடர்ந்து கிடக்கும் அலையாத்தி காடுகளின் இயற்கை அழகு நம்மை மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகள் … Read more

கந்துவட்டியால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளித்து இறந்த சம்பவம்: விசாரணையை முடிக்க 2 வாரம் கெடு 

மதுரை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்த வழக்கின் விசாரணையை 2 வாரத்தில் அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தென்காசி அச்சன்புதூரைச் சேர்ந்த கோபி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 23.10.2017-ல் இசக்கிமுத்து, இவர் மனைவி சுப்புலெட்சுமி, மகள்கள் மதுஅரண்யா, அட்சயபரணி ஆகியோர் தீக்குளித்து இறந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முத்துலட்சுமி, … Read more