சுதந்திரம் முதல் இன்று வரை.. 4000 தபால் தலைகளை சேகரித்துள்ள ஆசிரியருக்கு ஆட்சியர் பாராட்டு
சுதந்திரம் கிடைத்ததில் இருந்து இன்று வரை வெளியிடப்பட்டுள்ள 4,000 தபால் தலைகளை சேகரித்து வைத்திருக்கிறார் விழுப்புரம் பள்ளி ஆசிரியர் ஒருவர். மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆர்வத்தை தூண்டவும் நீண்ட நாட்களாக இந்த பணியை செய்து வருவதாக பெருமிதம் கொள்கிறார் அவர். தகவல் பரிமாற்றம் என்று சொன்னாலே அது கடிதப் போக்குவரத்தாக இருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது அது எங்கே என்று தேடும் நிலைக்கு வந்துவிட்டோம். இப்படி கடிதப் போக்குவரத்து இருந்த காலங்களில் கடிதங்களை கொண்டு செல்ல அரசாங்கத்திற்கு ஒரு தொகை … Read more