தமிழக செய்திகள்
அல்கொய்தா தலைவரை கொன்ற இரகசிய ஆயுதம்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூரில் பாதுகாப்பான இரகசிய வீட்டில் பால்கனியில் நின்றுகொண்டிருந்தபோது அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் உயிரை இழந்தார் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்-ஜஹாகிரி.இந்தச் சம்பவம் கடந்த மாதம் (ஜூலை) 31ஆம் தேதி நடந்தது. அல் கொய்தா தலைவரான அய்மான் அல்-ஜஹாகிரியின் தலைக்கு அமெரிக்க 25 மில்லியன் (2.5 கோடி டாலர்) விலை நிர்ணயித்திருந்தது. எகிப்து நாட்டைச் சேர்ந்த மருத்துவரான அய்மான் அல் ஜவாஹிரி 2001 செப்.11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர். ஹெல்ஃபயர் ஆர்9எக்ஸ் … Read more
ஆன்லைன் சூதாட்டம் | வல்லுநர் குழு பரிந்துரைக்கு பிறகும் அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தாமதிப்பது ஏன்? – ராமதாஸ்
சென்னை: வல்லுநர் குழுவே பரிந்துரைத்த பிறகும் அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தாமதிப்பது ஏன், இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டத்தை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சம் பணத்தை இழந்த வேதனையில் ராசிபுரம் அருகே சுரேஷ் என்ற பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சுரேஷை இழந்து வாடும் அவரது … Read more
கோவையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: தாய் மரணம்
இடப்பிரச்சினையை தீர்த்து தருவதாக கூறி தொழிலதிபரிடம் 15 பவுன் நகை, ரூ.25½ லட்சம் மோசடி செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கருப்பையா (45). தொழிலதிபரான இவர் தனியாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு … Read more
“என்னை எதிர்த்து பேசும் நீங்கள் பாஜகவை எதிர்ப்பீர்களா?” – ஜெயக்குமாருக்கு சீமான் கேள்வி
சென்னை: “அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பேசுவதற்கு ஆள் இல்லை. ஸ்டாலின், பாஜகவை பேசினால், நேராக அவரது வீட்டிற்கு சோதனைக்கு ஆட்கள் வருவார்கள். அதனால் என்னை பேசியுள்ளார்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், … Read more
“அரசுப் பள்ளிகளை மூடுவதுதான் மத்திய அரசின் திட்டம். புதுச்சேரியே சான்று” – ஷானு குற்றச்சாட்டு
புதுச்சேரி: “அனைத்து அரசுப் பள்ளிகளையும் மூடுவதுதான் மத்திய அரசின் திட்டம். புதுவை முதல்வரின் வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியே மூடப்பட்டுள்ளதுதே இதற்கு உதாரணம்” என்று இந்திய மாணவர் சங்க அகில இந்திய தலைவர் ஷானு குற்றம்சாட்டினார். “இந்திய தேசத்தை பாதுகாப்போம். கல்வியை பாதுகாப்போம்” என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக பிரச்சாரம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஐந்து இடங்களில் இருந்து இப்பயணம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலம், குஜராத், காஷ்மீர், கொல்கத்தா, … Read more
செம ஸ்கீம்; உங்க பணம் டபுள் ஆகிறது; இதைக் கவனியுங்க!
அஞ்சல சேமிப்பு திட்டங்கள் முதலீட்டாளர்கள் எப்போதும் விரும்பும் ஒரு சிறுசேமிப்பு திட்டமாகவே உள்ளன. சிறு துளி பெருவெள்ளம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இன்றளவும் அஞ்சல திட்டங்கள் திகழ்கின்றன.மத்திய அரசின் திட்டம், இடர்பாடுகள் குறைவு, 80சி வருமான வரி விலக்கு என அஞ்சல முதலீட்டு திட்டங்களின் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். நாம் தற்போது, கிசான் விகாஷ் பத்ரா அஞ்சல சேமிப்பு திட்டம் குறித்து பார்க்கலாம். 1/ Click to share on Twitter (Opens in new … Read more