தமிழக செய்திகள்
தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி
செஸ் ஓலிம்பியாட் தொடரில் ஸ்பெயின் வீரர் ஜெய்மிடம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் செல்லப் பிள்ளையாக பார்க்கப்படும் இந்திய பி அணி வீரர் பிரக்ஞானந்தா. இவர் இத்தாலி வீரர் லாரன்சோ லிடிசியை எதிர்கொண்டார். இந்த போட்டி 42 வது நகர்வில் டிராவில் முடிந்தது. இந்நிலையில் ஸ்பெயின் வீரர் ஜெயிமை அவர் எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா 85வது … Read more
காதலியின் நெஞ்சில் தனது பெயரை பச்சை குத்த நிர்பந்தித்த காதலன் கைது..! பிரேக் அப் ஆகி கம்பி எண்ணுகிறார்..!
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உண்மையான காதலை நிரூபிக்க தன் பெயரை நெஞ்சில் பச்சை குத்த காதலியிடம் கட்டாயபடுத்தியதாக காதலன் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சார்ந்த 18 வயது இளம் பெண், கருங்கல் அருகே உள்ளார் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தோழி ஒருவருடன் இணைந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுள்ளார். அப்போது அந்த தோழி மூலம் மார்த்தாண்டம் பயணம் பகுதியை சார்ந்த பூ வியாபாரி … Read more
புதிய புத்தொழில், புத்தாக்க கொள்கை விரைவில் வெளியிடப்படும்; தமிழகத்தை புத்தொளி மாநிலமாக்குவோம்: மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: தமிழகத்தை புத்தொழில், புத்தொளிமாநிலமாக உருவாக்குவோம் எனபுத்தொழில் நிறுவன சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க நிறுவனம் சார்பில், தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, புத்தொழில் நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். அதன்பின் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் 3-ம் பதிப்பில் தேர்வு செய்யப்பட்ட … Read more
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை உடைக்க வேண்டுமா? கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு
இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரப் பயணம் நிறைவு விழாவில் பேசிய, சினிமா சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கத்தில் கோயில் எதிரே உள்ள கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை (பெரியார் சிலை) என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. இந்து முன்னணி சார்பில், ‘இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம்’ என்ற தொடர் பிரச்சாரம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முடிவடைந்தது. இந்து … Read more
ஒற்றை தலைமையால் என்ன சாதித்து விட்டார்கள்.?.. பண்ருட்டி ராமச்சந்திரன் பரபரப்பு பேட்டி.!
சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணா திமுகவுக்கு இரண்டு தனித்தன்மைகள். தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு என்று இருக்கக்கூடிய ஒரே கட்சி அண்ணா திமுக. இரண்டாவது அந்தக் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம் ? அவர்களுக்கு சம வாய்ப்பு உண்டு. ஒன்று ஏழைகளுக்காக இருக்கக்கூடிய கட்சி, இரண்டாவது அந்த கட்சி யார் வந்தாலும் எல்லாரையும் பொதுவாக மனிதர்கள் என பார்க்கக்கூடிய ஒரு இயக்கம். மொழி, இனம் அதெல்லாம் தலைவர் காலத்தில் இருந்தே யாரும் பார்த்ததில்லை. அந்த … Read more
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன்பு நாளை முதல் மீண்டும் விசாரணை
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்துஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுஉறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நாளை (ஆக.4) முதல் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளன. கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக் கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினர் என்ற முறையில் அம்மன் வைரமுத்துவும் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி … Read more
கரை புரண்டு ஓடும் காவிரி: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
காவிரியில் வினாடிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக, கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. … Read more
மர்மநபர்கள் வீடுபுகுந்து கடத்திய 23 வயது இளம்பெண்ணை பத்திரமாக மீட்ட போலீசார்.!
மயிலாடுதுறையில் மர்மநபர்கள் வீடுபுகுந்து கடத்திய 23 வயது இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். விக்னேஸ்வரன் என்பவர், தனது பாட்டி வீடருகே வசித்த அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் விக்னேஸ்வரனை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்றிரவு பெண்ணின் வீட்டிற்குள் கூட்டாளிகள் 15 பேருடன் புகுந்த விக்னேஸ்வரன் அவரை வலுக்கட்டாயமாக கடத்தி ஸ்கார்பியோ காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மயிலாடுதுறை போலீசார் அளித்த தகவலின் பேரில், விக்ரவாண்டி டோல்கேட் அருகே விக்னேஸ்வரன் … Read more