அமைச்சர் எல்லாம் கிடையாது… ஸ்ட்ரைட்டா சி.எம். தானா? -உதயநிதி சொல்ல வருது என்ன?

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவடைந்த கையோடு, திமுக இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. திமுக இளைஞரணியை வலுப்படுத்தும் நோக்கிலும், திராவிட மாடல் அரசு குறித்து இளைஞரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையிலும் இந்த பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இளைஞரணி உறுப்பினர் அட்டைகளை வழங்கிய சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான , தொடர்ந்து … Read more

மதிப்பெண் குறைந்துவிடும் என்ற அச்சம்: நீட் தேர்வு எழுதிய மாணவியின் விபரீத முடிவு

கரூர் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியை அடுத்து கொள்ளுதின்னிபட்டி கிராமத்தில் வசிப்பவர்கள் சேகர் – லட்சுமி தம்பதியர். இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், இவரது மூத்த மகள் ப்ரீத்தி ஸ்ரீ. (18) கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த நிலையில், நீட் நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், குறைவான மதிப்பெண் (326 கட் ஆப்) பெற்றதால் எம்.பி.பிஎஸ் … Read more

விமர்சனத்தைத் தொடர்ந்து பேருந்துகளுக்கு முழுமையாக பிங்க் வண்ணம்: போக்குவரத்துத் துறை நடவடிக்கை

சென்னை: விமர்சனத்தை தொடர்ந்து பேருந்துகளுக்கு முழுமையாக பிங்க் வண்ணம் தீட்டும் பணியை போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து கொள்ளலாம். இதன்படி மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளுக்கு பிங்க் வண்ணம் தீட்டப்பட்ட 50 பிங்க் பேருந்துகளை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். மகளிர் இலவசமாக பயணம் … Read more

ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது: உயர் நீதிமன்றம்

ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும் எனவும் ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை என குற்றம்சாட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்திலும் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ளது. காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு … Read more

’ஹெல்மெட் மூலம் சிக்னல்’.. வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் அசத்தல் கண்டுபிடிப்பு

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியில், விபத்தில் சிக்கிக்கொண்ட நபரின் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டுள்ள கருவியின் துணை கொண்டு மொபைல் ஆப் மூலம் உதவி கூறும் புதிய படைப்பு உள்ளிட்டவற்றை மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி மூலம் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் விதமாக வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்நிலையில், நேற்று நெல்லை மாவட்டம் காந்திநகர் பகுதியில் உள்ள லிட்டில் பிளவர் பப்ளிக் … Read more

தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: ஆவினை விட 50% அதிகம்

சென்னை: தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆவின் பால் விலையை விட 50 சதவீதம் அதிகம் ஆகும். தமிழகத்திரல் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 வரை உயர்த்தியுள்ளன. இதன்படி ஒரு தனியார் பால் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், மற்றொரு தனியார் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரையும் உயர்த்தி உள்ளது. மேலும் மற்ற நிறுவனங்களும் பால் … Read more

இப்பலாம் யார் சார் சாதி பாக்குறாங்க…? தமிழகமும், நவீன தீண்டாமை நோயும்!

இந்தியாவில் முற்போக்கு சிந்தனைகள் அதிகம் கொண்ட மாநிலமாக, சமூக நீதி, இட ஒதுக்கீட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இருப்பினும் சாதி ரீதியிலான ஒடுக்குமுறைகள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. “எத்தனை பெரியார்கள் வந்தாலும் உங்களை திருத்த முடியாது” என்று கூறுவது போல தலித்களை குறிவைத்து நிகழ்த்தப்படும் தொடர் தாக்குதல்கள் மிகுந்த வேதனையை அளித்து வருகின்றன. சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தலித் தலைவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனமான தமிழ்நாடு தீண்டாமை … Read more

’படிக்க வரல; ஏதாவது சாப்புட கெடைக்குமானு பாக்க வந்தேன்’– பள்ளிக்குள் புகுந்த காட்டுயானை

கூடலூர் அருகே மீண்டும் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது அய்யன்கொல்லி பகுதி. கடந்த வாரம் இப்பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி வளாகத்திற்குள் காட்டு யானை புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் அனுப்ப முயன்றனர். அப்போது, யானைகள் சாலை வழியாக ஓடியது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு காட்டு யானை ஒன்று மீண்டும் அதே பள்ளி வளாகத்திற்குள் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முதல் தொகுதி பணிகளுக்கு தகுதியான பலர் தேர்வில் பங்கேற்கத் துடிக்கும் போது, வயதைக் காரணம் … Read more