அதிக வட்டி தருவதாக ரூ.930 கோடி சுருட்டல்: பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் 26ம் தேதி தீர்ப்பு

கோவை: திருப்பூரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2011ல் பாசி டிரேடிங் என்ற ஆன்லைன் நிதி நிறுவனத்தினர் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.930 கோடிமோசடி செய்தது. இதுதொடர்பாக, அந்த நிறுவனத்தின் இயக்குநர் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன் மற்றும் பங்குதாரர் கமலவள்ளி ஆகியோரை சி.பி.ஐ போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக கோவையில் உள்ள தமிழக முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) வழக்கு தொடரப்பட்டது. 2013ல் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் … Read more

அ.தி.மு.க அலுவலகத்தில் மது, மாமிசம்: கோவை செல்வராஜ் புகார்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பாபா இல்லத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின்  கோவை மாநகர மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ் கூறுகையில், நேற்று முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ் அவர்களை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அம்மாவால் விரட்டி அடிக்கப் பட்டவர் முனுசாமி. அவருக்கு கட்சியில் 2 ம் தலைவராக வாய்பு வாங்கி கொடுத்தவர் ஓ.பி.எஸ். எடப்பாடியே முனுசாமிக்கு எதிராக பேசிய … Read more

டாஸ்மாக் கடை ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய இளைஞர் கைது.!

சென்னை அடுத்த தாம்பரம் அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓட்டேரியில் உள்ள அந்த மதுக்கடைக்கு நள்ளிரவில் முகக்கவசம் அணிந்து வந்த அந்த இளைஞர் நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு சென்றார். உள்ளே உறங்கிகொண்டிருந்த ஊழியர்கள் யாரும் காயமடையாத நிலையில், இதுதொடர்பாக சொக்கலிங்கம் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் சொக்கலிங்கம் மது போதையில் நாய்குட்டி ஒன்றை துன்புறுத்தியதை அன்ங்கிருந்த … Read more

காரைக்கால் – இலங்கை கப்பல் போக்குவரத்து நடப்பாண்டு தொடக்கம்: புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுச்சேரி: காரைக்கால் – இலங்கை இடையே பயணிகள், சரக்கு கப்பல் போக்குவரத்து நடப்பாண்டு தொடங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். விடுதலைப் போராட்ட தியாகிகள் 260 பேருக்கு இலவச மனைபட்டா தரப்படும் என்றும் குறிப்பிட்டார். புதுச்சேரி சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: > இந்து சமய அறநிலையத் துறை, வக்பு வாரியம் நவீனமயமாக்கப்படும். அனைத்து கோயில்களின் தங்கம், வெள்ளி ஆபரணங்கள், கடவுள் உருவசிலைகள், அசையும் சொத்துக்கள் உட்பட அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் … Read more

குடிபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

பள்ளிப்பட்டு: குடிபோதனையில்  வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் பழைய காலனியைச் சேர்ந்தவர் சஞ்சய்(18)  8ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு வேலைக்கு செல்லாமல்  ஊர் சுற்றி வருவதாக கூறப்படுகின்றது. மது பழக்கத்திற்கு அடிமையாகி பணம் கேட்டு பெற்றோருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு அவரது கூரை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை … Read more

“மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவே சில இலவசத் திட்டங்கள்” – புதுச்சேரி பாஜக அமைச்சர் கருத்து

காரைக்கால்: மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவே சில இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என பாஜகவைச் சேர்ந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் கூறியுள்ளார். காரைக்காலில் இன்று (ஆக.22) அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”புதுச்சேரி முதல்வர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மாநில வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த, … Read more

ஜிஎஸ்டி வரி வருவாய் எகிற என்ன காரணம்? அடடா… இந்த விஷயத்தை கவனிச்சிங்களா!

‘ஒரே நாடு- ஒரே வரி’ திட்ட்த்தின் கீழ் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) வசூலித்து வருகிறது. மொத்தம் சுமார் 1,300 பொருட்களுக்கும், 500 விதமான பல்வேறு சேவைகளுக்கும் 5%,12%, 18%, 28% என நான்கு வகையின்கீழ் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும்போது, தினமும் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல், டீசல் ஏன் இன்னும் ஜிஎஸ்டியில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. … Read more

திடீர் `பிரேக் டவுன்’ மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி நின்ற அரசு பஸ்: டிரைவர் சாதுர்யத்தால் 120 பயணிகள் தப்பினர்

சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே மலைப்பாதையில் திடீரென பஸ் பிரேக் டவுன் ஆனதால் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. டிரைவரின் சாதுர்யத்தால் 120 பயணிகள் உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செங்கரையில் இருந்து ஆத்தூருக்கு நேற்று காலை 6.30 மணியளில் அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் முள்ளுக்குறிச்சி பள்ளியில் படிக்கும் 50 மாணவர்கள் உள்பட 120 பேர் பயணம் செய்தனர். மேல்பூசணி குழிப்பட்டி அருகே மலைப்பகுதியில் பஸ் வளைந்தபோது, திடீரென பிரேக் டவுன் ஆனது. டிரைவர் … Read more

பொதுத்துறை வங்கிகள் எப்படி தனியார்மயமாக்கப்பட வேண்டும்?

வங்கி தேசியமயமாக்கலின் 53ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. அப்போது, வங்கிகள் தேசியமயமாக்கலின் நன்மை, தீமைகள் குறித்த விவாதம் மீண்டும் கிளம்பியது.கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் அதிக அளவு செயல்படாத சொத்துக்களுடன் (NPAs) போராடி வருகின்றன. எளிமையாகச் சொன்னால், NPA கள் கடன் வாங்கியவர் வங்கியில் திருப்பிச் செலுத்தத் தவறிய கடன்கள். கணிக்கத்தக்க வகையில், அதிக அளவு NPA கள் வங்கியின் லாபத்தை பாதிக்கிறது.செயல்படாத சொத்துக்ளின் (NPA) அதிகரிப்பு மற்றும் அடுத்தடுத்த வருமான … Read more

அமலாக்கத் துறைக்கு கூடுதல் அதிகாரத்திற்கு எதிராக உள்ள மனுக்களை உச்ச நீதி மன்றம் விசாரணை..!

உச்ச நீதிமன்றம் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் பிரிவுகள் செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்துள்ளது. பணப் பரிமாற்ற மோசடிகளை தடுக்கும் வகையிலான பண மோசடி தடுப்புச் சட்டத்தில், அதை செயல்படுத்தும் அமலாக்கத் துறைக்கு புதிய அதிகாரங்கள் அளித்து சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமலாக்கத் துறைக்கு  பண மோசடி வழக்குகளில் சொத்துக்களை பறிமுதல் செய்தல், சோதனை நடத்துதல், கைது … Read more