சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை.!!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நாளை மறுநாள் முதல் தொடர்கிறது. 2023 மார்ச் 31ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.  இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளனர். சென்னையில் தமிழக தலைமை … Read more

இளைஞர்கள் வெற்றியே நாட்டின் வெற்றி – அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

சென்னை: இளைஞர்களுக்கு வளரும் சூழல்களுக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை புதிய கல்விக் கொள்கை அளிக்கிறது. இளைஞர்கள் வெற்றியே இந்தியாவின் வெற்றி என்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் உள்ள விவேகானந்தர் கலையரங்கில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில் 69 மாணவர்களுக்கு பட்டங்கள், பதக்கங்களை வழங்கினார். சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் … Read more

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளைஞர் – விசாரணையில் வெளியான உருக்கமான தகவல்கள்

நேற்று முன்தினம் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளைஞர் மரணத்தில் புதிய தகவல்கள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிறிஸ்டோபரின் காதலி புற்றுநோய் காரணமாக கடந்த … Read more

சுகர் பிரச்னைக்கு லெமன் ஜூஸ்.. இந்த நேரத்தில் குடித்துப் பாருங்க!

Diabetes Management – Lemon Water benefits in Tamil: நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதன் மூலம் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை. நீரிழிவு நோய் தற்போது உலகளவில் 425 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கிறது. இந்த நிலைமையை மாற்றுவது எளிதல்ல. உங்கள் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் உங்கள் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக் … Read more

வி.சி.க. விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடக்கிறது: கர்நாடக  முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. அதில், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘விருதுகள் வழங்கும் விழா – 2022’ சென்னை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. கட்சி யின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விழாவுக்குத் தலைமை தாங்குகிறார். கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், துரை.ரவிக்குமார் … Read more

21 வயது பெண் தன் பாலின உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு: மதுரை ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு

தன் பாலின உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்தால் கடத்தப்பட்ட பெண் 21 வயது பூர்த்தியடைந்தவர் என்பதால் அவரது விருப்பப்படி செல்ல அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த ஆணாக மாறிய பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்தோம். கடந்த ஜூலை 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து … Read more

அதிமுகவை ஒன்றிணைக்க இறங்கிய முக்கிய புள்ளி.! வெளியான அறிவிப்பு.!!

அதிமுக தற்போது பல அணிகளாக பிரிந்துள்ளது. டிடிவி தினகரன் அணி, சசிகலா அணி, எடப்பாடி பழனிசாமி அணி, ஓ பன்னீர் செல்வம் அணி என அதிமுக பல அணிகளாக பிரிந்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் எம்ஜிஆர் ஆதரவாளர்கள் அணி ஒன்றும் உள்ளது.  இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்க அதிமுகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே சி பழனிசாமி இறங்கியுள்ளார். இதற்காக அவர் சென்னை வடபழனியில் பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள டிஜே … Read more

கள்ளக்குறிச்சி கலவரத்தால் இடமாற்றமான எஸ்.பி செய்த மனிதநேய உதவி..! பஹ்ரைனில் தவித்தவர் மீட்பு

கள்ளக்குறிச்சியில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்காக சென்று 31 வருடங்களாக சொந்த ஊருக்கு திரும்ப இயலாமல் தவித்த முதியவர் ஒருவர், அங்குள்ள அன்னை தமிழ் மன்றம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு சொந்த ஊருக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கலவரத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி எஸ்.பி செல்வக்குமாரின் மனிதநேய உதவி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கள்ளக்குறிச்சியை சேர்ந்த பச்சமுத்து என்பவர் 1991 ஆம் ஆண்டு வேலைக்காக பஹ்ரைன் நாட்டிற்கு சென்றார். அங்கு சென்ற பின்னர் பச்சமுத்து குடும்பத்தினரை … Read more

தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா

சென்னை: சென்னை, தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் 388 விமானப்படை வீரர்கள் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களது பயிற்சி நிறைவு பெற்றதையடுத்து பயிற்சி நிறைவு அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இம்மையத்தின் அதிகாரி ஏர் கமாடோர் விபுல் சிங் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் பேசிய அவர், “பயிற்சி முடித்த வீரர்கள் தங்களது பணியில் சிறந்து விளங்க பாடுபட வேண்டும். மேலும், அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களின் அறிவு மற்றும் திறன்களை … Read more