ராகுல் காந்தி யாத்திரை: கை கோர்க்கும் முன்னாள் காங்கிரஸ், ஆம் ஆத்மி பிரமுகர்கள்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரை நிகழ்வை பலரும் உற்றுநோக்குகின்றனர். இந்த நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலரும் கலந்துகொள்கின்றனர். குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டு வெளியேறும் போது ராகுல் மீது சில குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதற்கு மத்தியில், இந்தப் பாதயாத்திரை நிகழ்வானது, 12 மாநிலங்களை 150 நாட்களில் கடக்கிறது. கிட்டத்தட்ட 3,500 கிமீ-க்கும் அதிகமான பாத யாத்திரையை இதுவாகும். இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலரும் இருக்கின்றனர். யோகேந்திர யாதவ் இவர் அரசியலில் தீவிரமான வாழ்க்கையைத் … Read more

பேருந்துகளில் தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு- போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி..!

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபொது தெரிவித்ததாவது:- தமிழ்நாட்டில், பெண்களுக்கு இலவசப் பயணம் அறிவித்த பிறகு, சென்னையில் பெண்களின் பயணம் 69 சதவீதம் அளவுக்கு பெண்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் இந்தியாவில் யாரும் கொண்டு வராத சிறப்பான திட்டம் ஆகும். இலவச பேருந்து பயண திட்டம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு லாபம் தரக்கூடிய ஒரு செயல்பாடாக உள்ளது. அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. … Read more

தமிழக மீனவர்கள் கைது; மீண்டும் இலங்கை கடற்படை அத்துமீறல்: அன்புமணி கண்டனம்

சென்னை: மீண்டும் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது செய்துள்ள சிங்களப் படையினரின் தொடர் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது: ”வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்யப்பட்டு தலைமன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. கடந்த … Read more

இரு குடும்பங்களுக்கும் உறவான கோபாலபுரம் வீடு நட்பு பாலமாய் உயர்ந்தது: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: கோபாலபுரம் வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு விற்பனை செய்த குடும்பத்தினர் அந்த வீட்டை பார்வையிட்டது குறித்த செய்தியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”வீடு என்பது பலரது கனவு.கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன. எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு. தலைவர் கலைஞர் திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு. … Read more

வேளாங்கண்ணி தேவாலய கொடியேற்றம்; 2 ஆண்டுகளுக்குப் பிறகு பொது மக்களுக்கு அனுமதி

Velankanni church festival starts from August 29: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை (ஆகஸ்ட் 29-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த திருவிழாவிற்காக பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள், ஊர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நடை பயணமாகவும் வருகை புரிவதால் திருச்சி-நாகை சாலையில் இரவு நேரங்களில் போலீஸாரின் ரோந்துப்பணி அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதையும் படியுங்கள்: 100 வாகனங்கள்… 10 லட்சம் … Read more

'செப்.3 முதல் தமிழர் கோயில்களில் தாய்த்தமிழில் வழிபாடு' – சீமான் அறிவிப்பு

சென்னை: “தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்து வரும் செப்டம்பர் 3-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் “தாய்த்தமிழில் வழிபாடு” நிகழ்வை முன்னெடுக்கிறது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கை: “அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்து … Read more

சிங்களப்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் – ராமதாஸ்

சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ள 6 மீனவர்களையும், ஏற்கனவே சிறையில் வாடும் 10 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதில் கூறியுள்ளதாவது, ”வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்யப்பட்டு தலைமன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. கடந்த இரு மாதங்களில் தமிழக மீனவர்கள் … Read more

தொட்டபெட்டா மலை சிகரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கோவை மூதாட்டி; உடலை மீட்கும் பணி தீவிரம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சிகரம் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டாவில் முகாமிற்கு இயற்கை காட்சிகளையும் பள்ளத்தாக்கு பகுதிகளையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். அப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா சிகரத்தில் இருந்து பள்ளத்தாக்குகளை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர். காட்சி கோபுரத்திற்கு கீழ்ப்பகுதியில் பாறைகள் நிறைந்த ஆபத்தான சரிவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை பெண் சுற்றுலா பயணி ஒருவர் … Read more

நேற்று கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை.. இன்று உயர் பதவியில் வேலை.. நெகிழ்ச்சி கதை!

மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினராலே கைவிடப்பட்ட இருவர், கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றுள்ளனர். இது அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் மற்றும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த ஒருவர் மாதம் 60,000 சம்பாதிக்கும் மேலாளர் பணிக்கு தேர்வாகியுள்ளார். போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆங்கிலோ இந்தியனான மற்றொருவரோ குடியில் இருந்து மீண்டு காபி ஷாப்பில் வேலைக்கு செல்கிறார். இவர்களில் ஒருவரான 29 வயதாகும் ஜேம் சேவியர், ஏழாம் வகுப்பு படிக்கும் … Read more

தொட்டபெட்டா மலை உச்சியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை

நீலகிரி மாவட்டம் உதகை அருகே தொட்டபெட்டாவில், மலை உச்சியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை செய்துக்கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொட்டபெட்டா காட்சி முனையில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது தடுப்புகளை தாண்டி மலை உச்சிக்கு சென்ற ஒரு பெண், திடீரென கீழே குதித்துள்ளார். இதனை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் சிலர் வீடியோ பதிவு செய்த நிலையில், தகவல் அறிந்து வந்த உதகை … Read more