முழுப் பாடத் திட்டத்தை சுமத்துதல், கூடுதல் வகுப்புகள் கூடாது: மாணவர்களின் மன அழுத்தம் போக்க ராமதாஸ் யோசனை

சென்னை: “மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க, முழுப் பாடத் திட்டத்தையும் மாணவர்கள் மீது சுமத்தாமல் பாடத்திட்டத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்; கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது” என்று பள்ளிக் கல்வித் துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி மர்மச்சாவு காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியும், விளைவுகளும் தணிவதற்கு முன்பே, 3 நாட்களில் நான்கு மாணவ, மாணவியர் தற்கொலை … Read more

பெரம்பலூர்: கல்குவாரியில் திடீரென சரிந்து விழுந்த பாறை.. இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் பகுதியில் உள்ள மலையில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் 100 பேருக்கும் மேல் தினமும் வேலைபார்த்து வருவதாக கூறப்படுகிறது. பணிசெய்யும் போது பாறை சரிந்து விழுந்து, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கல்குவாரி அதிமுக பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமானது என தகவல்கள் வெளியாகி … Read more

“அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி இலக்கு நோக்கி தமிழக அரசு” – அண்ணா பல்கலை. விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கல்லூரிக் கல்வி, அனைவருக்கும் உயர் கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்க்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைத்தற்காக பிரதமருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய உயர் கல்வித் துறை அமைச்சகம் அண்மையில் … Read more

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியா? முதல்வர் விளக்கவேண்டும்: பிஆர்.பாண்டியன்

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி-க்கு அனுமதியா? முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என பி.ஆர் பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன், கச்சா பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு ஓஎன்ஜிசிக்கு அனுமதிக்கக் கூடாது என கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்தோம். 2020 ஆம் ஆண்டு முதல் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் … Read more

மோடி, அமித்ஷா படங்களுடன் போஸ்டர்: ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிரடி

காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் மோடி, அமித்ஷா ஆகியோர் இடம் பெறும் வகையில் ஒட்டபட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இது ஒரு புதிய சர்ச்சயை உருவாகி உள்ளது. தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் பெரிதாக வெடித்தது. இரண்டு செயற்குழு நடத்தப்பட்டு இறுதியாக அதிகமுகவிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம் இருந்ததால், எடப்பாடி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக … Read more

மறக்க முடியாத அனுபவம்! மனதார பாராட்டிய அன்புமணி! யாரை? எதற்காக?!

தமிழர் நாகரிகப் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய செஸ் ஒலிம்பியாட் தொடக்க திருவிழாவிற்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள் தெரிவித்திருக்கிறார் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாடு கோப்பையை வென்றிருக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் கண்டு களித்த சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், இனப் பெருமைகள், துயரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அனைவர் மனதிலும் பதிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு … Read more

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படம் இடம்பெற வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படம் இடம் பெற வேண்டும். இருவரின் புகைப்படங்கள் இடம் பெற்ற விளம்பரங்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களை சேர்க்க உத்தரவிடக் கோரி சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். … Read more

இரவில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு – கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை

இரவில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகணல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 4 மணி முதல் நள்ளிரவு வரை பெய்த கன மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா … Read more