பிளவுகளை கடந்து அதிமுக அம்மாவின் ஆட்சியை அமைக்கும் – சசிகலா ஆருடம்

பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணைந்து, அம்மாவின் ஆட்சி உருவாகும் என மதுரை விமான நிலையத்தில் சசிகலா தெரிவித்தார். திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது… புரட்சித் தலைவர் அதிமுகவை தொடங்கிய சிறிது காலத்திலயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர் மாயத்தேவர். கழகத்தின் … Read more

250 கிலோ, 76 சதுர அடி பரப்பளவு உள்ள கேக்.. கோவை கல்லூரி மாணவர்கள் அசத்தல்

கோவையில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக  கல்லூரி மாணவர்களால் தயாரித்த 250 கிலோ எடை கொண்ட 76 சதுர அடி பரப்பளவு கேக் அப்துல்கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம் பெற்றுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தில் அனைத்து வீடுகளிலும், நிறுவனங்களிலும் தேசிய கொடியினை ஏற்றியும், கல்வி நிறுவனங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட உள்ளன. இந்நிலையில் இந்த 75வது சுதந்திர தினவிழாவை வரவேற்க்கும் விதமாக கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் … Read more

2 மாத இடைவெளியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று..!!

 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஏற்கனவே, கடந்த ஜூன் மாதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரது மகள் பிரியங்கா காந்திக்கும் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.  இரண்டு மாத … Read more

“பிஹாரில் ஏற்பட்டுள்ளது நல்ல மாற்றம். இது தொடரும்…” – திருப்பூரில் முத்தரசன் பேட்டி

திருப்பூர்: பிஹார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பாராட்டுகிறோம் என, திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியது: ”இந்திய கம்யூனிஸ் கட்சியின் 25-ம் மாநில மாநாடு திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறையாக மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. திருப்பூர் மாநகரில் நடந்த பிரமாண்ட பேரணி மூலம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மாநாட்டில் 101 மாநிலக் குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். … Read more

நிதிஷ் பாணியில் பாஜகவை கழற்றி விடுவாரா இபிஎஸ்?

பாஜகவை கழற்றிவிட்ட நிதிஷ்: பாஜகவுடனான ஐக்கிய ஜனதா தளத்தின் அரசியல் உறவை முறித்துக் கொண்டுள்ள நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கைகோர்த்துள்ள தரமான சம்பவம் பிகார் மாநிலத்தை தாண்டி தேசிய அரசியலில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. கூட்டணியில் இருந்து கொண்டே ஜக்கிய ஜனதா தளத்தை உடைக்கும் வேலையில் பாஜக இறங்கியதுதான் அதனை கழற்றிவிடுவதற்கு காரணம் என்று நிதீஷ் குமார் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளதால்தான் பிகார் அரசியல் அந்த மாநிலத்தையும் தாண்டி, தேசிய அளவில் இன்று பரபரப்பாக … Read more

சாலை விபத்து: மீன்பிடித் திருவிழாவிற்கு வந்த இருவருக்கு நேர்ந்த பரிதாபம்

நத்தம் அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒத்தகடை என்ற இடத்தில் வி.எஸ்.கோட்டையில் இருந்து நத்தம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. மறுமார்க்கத்தில் கோபால்பட்டி அருகே கன்னிpயாபுரத்தில் நடைபெறும் மீன்பிடி திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ … Read more

சாதி, மத மோதல்களுக்கு காரணம் இது தான்.. சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற்காக அடிமையாகிறவர்களின் தொகையும் அதிகமாகி வருவதை நினைக்கும்போது கவலையும் வருத்தமும் கூடவே செய்கிறது. கடந்த ஆட்சியில் இது பற்றி போதிய கவனம் செலுத்தாமல் விட்டதன் காரணமாக இந்த சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று … Read more

செஸ் ஒலிம்பியாட் | வெற்றி பெற்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடரில் பொதுப் பிரிவில் ‘இந்திய பி அணியும்’ பெண்கள் பிரிவில் ‘இந்திய ஏ அணியும்’ வெண்கலம் வென்றது. இந்த அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 44 வது சர்வதேச செஸ் … Read more

அதிமுகவுக்கு நிதிஷ்குமார் சொல்லும் பாடம்: ஆளுமைன்னா என்ன தெரியுமா?

பீகார் அரசியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் தேசிய அரசியலில் பெரும் கவனம் பெற்றுள்ளது. பாஜகவோடு கூட்டணியை முறித்துக் கொண்ட முதல்வர் நிதீஷ் குமார் காங்கிரஸ், இடதுசாரி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆதரவுடன் மீண்டும் முதல்வராக இன்று பதவியேற்கிறார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 74 இடங்களும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 43 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் மட்டுமே … Read more

'நீங்கெல்லாம் பஸ்ல ஏறாதீங்க' – நடத்துனரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்

திருச்செங்கோடு அருகே பள்ளி மாணவ மாணவிகளை பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் தரக்குறைவாக பேசியதாக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இங்கிருந்து செல்லும் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமாக ஒரு சிறப்பு பேருந்து இயக்கப்படும். அவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்து குறித்த நேரத்திற்கு வராததால் பள்ளிக்கு செல்ல காலதாமதம் ஆனதால் வழக்கமாக அந்த … Read more