எருமையிடம் மனு அளிக்கும் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு – சென்னை உயர்நீதிமன்றம்

ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்து என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணைநல்லூர் பகுதியில்  பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு பட்டா வழங்க கூடாது என்றும் … Read more

சென்னை தினம்: எஸ்.பி.பிக்கு அஞ்சலி- முக்கிய நிகழ்ச்சிகள் பட்டியல் இதோ

Chennai Tamil News: மெட்ராஸ் தினத்தில் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியல் மக்களுக்காக வழங்கப்படுகிறது. சென்னை தனது 383வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், சென்னை மாநகராட்சி ஏராளமான நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் திட்டமிட்டுள்ளது. மறுபுறம், சென்னை நகரின் வரலாற்றையும் மக்களின் கலாச்சாரத்தையும் போற்றும் வகையில் பல நிகழ்ச்சிகள் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை திருவிழாப் போல திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் மறைந்த எஸ்.முத்தைய்யா, பத்திரிக்கையாளர் சஷி நாயர் மற்றும் வெளியீட்டாளர் வின்சென்ட் டிசோசா … Read more

தற்கொலையை தடுக்க எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை – அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்..!

தமிழகத்தில் எலி பேஸ்ட் விற்பனையை தடை செய்ய சட்டம் கொண்டு வர இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் தற்கொலை செய்து கொள்பவர்களி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்கொலைக்களை தடுக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரதுறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களை சந்திந்த அவர் தமிழகத்தில் தற்கொலை தடுப்பதற்கா எலி பேஸ்ட், சாணிபவுடர் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் … Read more

வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜெண்ட் டெம்போவில் கடத்தல் – 3 பேர் கைது..!

திட்டக்குடி அருகே, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், பட்டப்பகலில் வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜெண்டை டெம்போவில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். வெளிநாட்களுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக இருந்து வரும் கிருஷ்ணன் என்பவருக்கும் குமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணன், குமாருக்கு கொடுக்க வேண்டிய பல லட்சம் ரூபாயை தராமல் அலைக்கழித்து வந்ததாகவும் பலமுறை கேட்டும் பணத்தை தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார் தனது நண்பர் ஆனந்துடன் … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில்  4 நாட்களுக்கு மழை வாய்ப்பு 

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 21 மற்றும் … Read more

இந்த பள்ளிகளுக்கு சிக்கல்: சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு!

சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தில் செயல்பட்டு வந்த சாய் விஹார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதலும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக கூறி, பள்ளியை மூன்று நாட்களில் மூடும்படியும், மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவும் சேலத்தில் உள்ள வட்டார கல்வி அதிகாரி, … Read more

திருவாடானையில் பராமரிப்பின்றி கிடக்கிறது 100 ஆண்டு பழமையான கோயில் புதுப்பொலிவாகுமா?: புனரமைத்து குடமுழுக்கு நடத்த பக்தர்கள் கோரிக்கை

திருவாடானை: திருவாடானையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமகா மாரியம்மன் கோயில் பராமரிப்பு இன்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனை புனரமைப்பு செய்து குடமுழுக்கு விழா நடத்தி வழிபாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாடானை பேருந்து நிலையம் அருகில் மிகவும் பிரசித்திபெற்ற 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவில் ராமநாதபுரம் சமஸ்தானம் – தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மேலும் … Read more

கோவை: காயம்பட்ட காட்டு யானை… 5வது நாளாக தேடுதல் வேட்டை நடத்தும் வனத்துறை!

பி. ரஹ்மான் – கோவை மாவட்டம் கோவை ஆனைக்கட்டி வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஒற்றை காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடந்த நான்கு நாட்களாக தேடியும் கிடைக்காத நிலையில் நேற்றிரவு ஆனைக்கட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்திற்குட்பட்ட நான்கு இடங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி வனப்பகுதியில் கடந்த 15 ஆம் தேதி உடல் நலத் குறைவு காரணமாக கடும் சோர்வுடன் அங்குள்ள ஆற்றின் ஓரமாக நின்றிருந்த ஒற்றை காட்டு … Read more

கோத்தகிரி  அரக்காடு தேயிலை தோட்டத்தில் சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரக்காடு பகுதியில் 4 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரக்காடு பகுதியில் கடந்த 10-ம் தேதி தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளி கிஷாந்த் என்பவரின் நான்கு வயது மகள் சாரிதாவை தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் கிராம பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க … Read more

எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டமா? நோ சொன்ன நீதிமன்றம்!

ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணைநல்லூர் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட அரசு நிலங்களுக்கு அவர்கள் … Read more