தமிழக செய்திகள்
காந்திய மக்கள் இயக்கம் இனி காமராஜர் மக்கள் இயக்கமாக செயல்படும்: தமிழருவி மணியன் அறிவிப்பு
சென்னை: காந்திய மக்கள் இயக்கம் இனி காமராஜர் மக்கள் இயக்கமாக செயல்படும் என்று தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை. நேர்மையும், நாணயமும், நல்லொழுக்கமும் நிறைந்த, ஊழலின்நிழல் கூடப் படியாத, வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை முன்னெடுத்துச் சென்ற காமராஜரின் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த தூய்மையான அரசியல் வேள்வியில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயமாகும். 53 ஆண்டுகள் நேர்மை பிறழாமல், ஒழுக்கம் தவறாமல், அரசியலைப் பயன்படுத்தி ஒரு … Read more
100 அடியை எட்டும் பவானிசாகர் அணை – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர் மழை காரணமாக பவானி சாகர் அணை 100 அடியை எட்டுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. பவானி ஆறு மற்றும் மாயாற்று நீரும் அணைக்கு வந்து சேருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை … Read more
Kallakurichi school.. உரிமம் இல்லாமல் இயங்கிய தனியார் பள்ளி விடுதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன், இரண்டு ஆசிரியைகள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே மாணவி மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. … Read more
திமுக எம்பி திருச்சி சிவாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு.. டெல்லி மருத்துவமனையில் அனுமதி.!!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவிற்கு திடீரென உடல் … Read more
ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.62,500 பணத்தை ரயில் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்.!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையம் அருகே பயணி ஒருவர் தவறவிட்ட 62 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்து ரயில் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. சீர்காழி ரயில் நிலையம் வளாக சாலையில் பயணி ஒருவர் தவறவிட்ட பணத்தை அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர் சரவணன் பார்த்து எடுத்துள்ளார்.உடனடியாக அப்பணத்தை ரயில் நிலைய அலுவலர் மணிகண்டனிடம் ஒப்படைத்துள்ளார். நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர் பணத்தை ஒப்படைத்ததை அறிந்த பொதுமக்கள் வெகுவாக … Read more
23 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள்,புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் சில இடங்களில் கனமழை … Read more
கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெறுவார்களா பெற்றோர்? இன்று மீண்டும் விசாரணை
கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றோர் பெற்றுக்கொள்வது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றுக்கொள்வது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலை பெற்றோர் வாங்கவில்லை என்றும், அனைத்து நடைமுறைகளும் நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்றதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவில் தங்களுக்கு சாதகமான உத்தரவு இருப்பதாக மனுதாரரான மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். தங்கள் தரப்பு வழக்கறிஞர் … Read more
கடைசி கார்… கண்ணீருடன் விடைபெற்ற ஃபோர்ட் ஊழியர்கள்!
மறைமலை நகரில் செயல்பட்டு வரும் ஃபோர்ட் கார் உற்பத்தி நிறுவனத்தின் கடைசி காரை விற்பனைக்கு கொண்டுவந்த ஊழியர்கள் கண்ணீருடன் பிரியா விடை கொடுத்த நிகழ்வு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்ட் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் இந்தியாவில், அகமதாபாத் சென்னை ஆகிய 2 இடங்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை வரும் ஜூலை 31-ந் தேதி முதல் மூடப்பட … Read more