‘வெல்கம் டு சென்னை’ – செஸ் ஒலிம்பியாட் பாடலை வெளியீட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: “வெலகம் டு சென்னை” என்ற செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பாடல் படப்பிடிப்பு கடந்த 7-ம் தேதி இந்த சென்னை … Read more

ஹார்ட் டிரைவை கைப்பற்றிய புலனாய்வு குழு! கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அவிழுமா மர்மமுடிச்சு?

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கினர். அப்போது அவர்கள் கையில் ஹார்ட் டிரைவ் கிடைத்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முழு உண்மைகளும் தெரிய வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டதோடு காவல்துறை வாகனங்கள் … Read more

மாணவி ஸ்ரீமதி மரணம்; பெரும்பாலான சி.சி டி.வி காட்சிகளை மறைப்பது ஏன்? வேல்முருகன் கேள்வி

க. சண்முகவடிவேல் Kallakurichi student death case; T. Velmurugan MLA Tamil News: திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளும் இணைப்பு விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமை தாங்கினார். திருச்சி வடக்கு மாவட்ட … Read more

கடன் தொல்லையால் தந்தை மகள் தற்கொலை.. கரூர் அருகே நிகழ்ந்த சோகம்..!

கடன் தொல்லையால் தந்தை மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே உள்ள காந்திகிராமம் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் முகமது பரீத். இவருக்கு திருமணமாகி  இரண்டு குழந்தைகள் உள்ளனர். முகமது அங்குள்ள  வங்கியில் கடன் பெற்றுபுதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கிடையில்,  கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மந்திரித்த தண்ணீர் எனக் கூறி மனைவி நஸ்ரின்பானு மற்றும் ஜகிந்நாஜ் ஆகியோருக்கு தண்ணீரில் … Read more

கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரில் இருவர் சடலமாக மீட்பு

திருவிடைமருதூர் : கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரில் இருவரது சடலங்கள் மயிலாடுதுறை அருகே இரு வேறு இடங்களில் மீட்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம் பந்த நல்லூர் அருகேயுள்ள மதகு சாலை கிராமத்தைச் சேர்ந்த மனோஜ்குமார்(24), அப்பு என்ற ராஜேஷ்(22), ஆகாஷ் (24),ன்கொளஞ்சிநாதன் (34) ஆகிய 4 பேர் ஜுலை 18-ம் தேதி இரவு மதகுசாலை கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றனர். ஆற்றில் 4 பேரும் தண்ணீரில் சிக்கிக் கொண்ட நிலையில், தகவல றிந்து வந்த … Read more

“மின்சார துறையில் நஷ்டம் ஏற்படுவது சாதாரண விஷயம்; அதற்காக கட்டணத்தை உயர்த்துவதா?”-தங்கமணி

‘நிர்வாகத் திறமையின்மையால் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது’ என விமர்சித்துள்ளார் முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி. நாமக்கல்லில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் முறையாக கலந்தாலோசிக்காமல் மின்சார கட்டண உயர்வை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படும் வகையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நிர்வாக திறமையின்மையால் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார துறை என்பது சேவைத்துறை, … Read more

மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் Vs சென்னை மேயர் – அனல் பறந்த ஆய்வுக் கூட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், போதைக்கு அடிமையாகும் மாணவர்கள், தினசரி குறையும் வருகை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் – சென்னை மேயர் இடையே அனல் பறக்கும் கருத்துகள் பகிரப்பட்டன. சென்னை மாநகராட்சி கல்வித் துறை நிர்வாகத்தின் கீழ் 281 சென்னைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கற்றல் திறன், ஆசிரியர்களின் … Read more

கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதிகேட்டு போராட்டம் என பரவிய தகவல்: கல்லூரி முன் குவிந்த போலீஸ்

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலையடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் கந்தசாமி கல்லூரிக்கு போலீஸ் பாதுகாப்பு விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக, கல்லூரி மாணவர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தப்போவதாக வாட்ஸ்-அப்பில் தகவல்கள் பரவியுள்ளது. குறிப்பாக அண்ணா நகர் கந்தசாமி கல்லூரி மற்றும் கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரிகளில் போராட்டம் நடக்க … Read more

துணை ஜனாதிபதி தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் விலகி இருக்க முடிவு

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் இல்லத்தில் ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னாள் மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கரை நிறுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டுள்ளார். எம்.பி.க்கள் கூட்டத்திற்குப் பிறகு, அகில இந்திய … Read more

மதுரை.! இருசக்கர வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.!

மதுரையில் இருசக்கர வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன்(23). இவர் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஆனந்தன், உறவினரான முத்து கணேசனுடன் இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தொட்டப்பநாயக்கனூர் தனியார் பள்ளிய அருகே சென்ற போது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி முன்னாள் சென்ற லாரி மீது மோதி … Read more