கள்ளக்குறிச்சி சம்பவம்.. மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன், இரண்டு ஆசிரியைகள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவி பள்ளிக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மகளின் … Read more

திண்டுக்கல்.! சரக்கு வாகனம் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.!

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானது. கரூர் மாவட்டத்தை தேர்ந்த விஜய் என்பவர் நர்சரி தோட்டம் வைத்துள்ளார். இவரது தோட்டத்திற்கு ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள உரமூட்டைகளை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து சரக்கு வாகனம் ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது வேடசந்தூர் அருகே திண்டுக்கல் கரூர் நான்கு வழி சாலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், வேகமாக சென்று அங்கிருந்த 10 அடி பள்ளத்தில் தலைகுப்புற … Read more

19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. இதுல உங்க மாவட்டம் இருக்கா..?

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (21-ம் தேதி) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதுபோல நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணையை இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை … Read more

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர் பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை … Read more

மீண்டும் திறக்கப்பட்ட அ.தி.மு.க அலுவலகம்: உள்ளே சென்ற இ.பி.எஸ் தரப்பு ஷாக்

ADMK office seal removed and handed over to EPS: அ.தி.மு.க தலைமை அலுவலகம் சீல் அகற்றப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் சாவி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உள்ளே சென்று பார்த்த நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை கோரிக்கை காரணமாக, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு அணியும் உருவானது. இதில் இ.பி.எஸ் தரப்பு ஒற்றை தலைமை கோரிக்கையை நிறைவேற்றி, அ.தி.மு.க.,வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் … Read more

சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முதியவர் மீது பல்சர் பைக் மோதி விபத்து.!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர், பின்னால் வந்துகொண்டிருந்த பல்சர் பைக்கை கவனிக்காமல் இடதுபுறமாக செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளான காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன. வேளாங்கண்ணியில் ஃபைனான்ஸ் தொழில் செய்து வரும் சூசை என்ற முதியவர், நேற்று மாலை நாகப்பட்டினம் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது வழியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.     Source link

ஆவின் தயிர், நெய் விலைகள் 20% உயர்த்தப்படுவது நியாயமற்றது: அன்புமணி

சென்னை: ஆவின் தயிர், நெய் விலைகள் 20% உயர்த்தப்படுவது நியாயமற்றது, அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான இந்த விலை உயர்வு நியாயமற்றது; ஏற்றுக் கொள்ள முடியாதது. கடந்த மார்ச் … Read more

ராஜராஜ சோழனால் வெட்டப்பட்ட உய்யக் கொண்டான் வாய்க்கால்: பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

விவசாயிகளுக்கான கொடையாகத் திகழ்ந்த உய்யக்கொண்டான்  கால்வாய் ராஜராஜ சோழனால் வெள்ளக்காலத்தை மனதில் கொண்டு 1,200 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலத் தொழில்நுட்பத்தின் உதவியோடு வெட்டப்பட்டதாகும். மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராஜராஜ சோழனின் சிறப்பு பெயர்களில் ஒன்றான உய்யக்கொண்டான் எனும் பெயரையே இக்கால்வாய்க்கு சூட்டினர். அப்படி வரலாற்று சிறப்புமிக்க திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு தண்ணீர் அமைப்பைச் சேர்ந்த கே சி நீலமேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திப்பு.. பேசப்பட்ட முக்கிய விவகாரம்.!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று 12 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மற்றும் … Read more